சிஏஏ என்பது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் – இந்தியா

இந்தியாவில் சிஏஏ கொண்டு வரப்பட்டது மற்றும் காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது ஆகியவற்றிற்கு எதிராக ஐரோப்பிய யூனியனில் 6 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் மொத்தமுள்ள 751 உறுப்பினர்களில் 600 க்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்த தீர்மானங்களை ஆதரித்து ஓட்டளித்தன. இவற்றில் பெரும்பாலானவை கிறிஸ்தவ, சோசலிச அமைப்புக்கள் ஆகும். இவைகள் சிஏஏ உலக நாடுகளில் மிகப்பெரிய நெருக்கடி நிலையை உருவாக்கக் கூடியது என விமர்சித்திருந்தன.

 

ஐரோப்பிய யூனியனில் நடந்த விவாதத்தின் போது இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், சிஏஏ என்பது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். ஜனநாயக முறையில் பார்லி.,யின் இரு அவைகளிலும் வெளிப்படையாக விவாதங்கள் நடத்தப்பட்டு, முறையாக நிறைவேற்றப்பட்டு, அமல்படுத்தப்பட்டதாகும். உலகின் எந்த பகுதியிலும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் மற்றும் அதன் உரிமைகள் குறித்து ஐரோப்பிய யூனியன் கேள்வி கேட்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது