காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், குடியுரிமை சட்டம், ஜிஎஸ்டி., வரிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் வாரணாசியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் அல்லாத மக்களுக்கு மதரீதியான தொந்தரவுகள், சிக்கல்கள் ஏற்பட்டால் அவர்கள் எங்கு செல்வார்கள்? இத்தாலிக்கா? இந்தியாவிற்கு தான் வர வேண்டும், அப்படி வரும் முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்குவது இந்தியாவின் தார்மீக கடமை.
காங்கிரஸ்முன்னாள் தலைவர் ராகுல், குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் (சிஏஏ), ஜிஎஸ்டி.,க்கும் வித்தியாசம் இல்லை என்கிறார். அப்படியெனில், சிஏஏ திருத்தப்பட்டால் ஜிஎஸ்டி வரி உயருமா? இரண்டிற்கும் வேறுபாடு தெரியாவிட்டால், அவர், சிறந்த ஆசிரியரை பணிக்கு அமர்த்தி தெரிந்து கொள்ளட்டும். அவருக்கு என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர்., குறித்து எந்தவித புரிதலும் இல்லை என நினைக்கிறேன். இவ்வாறு கிஷன் ரெட்டி பேசினார்.