15 வருடங்கள் ஆகி விட்டது… ஆழிப்பேரலை நம்மை சூறையாடி…
சங்கமும், சேவா பாரதியும் களம் கண்டது… அந்த நேரம் முகாம்கள் நடைபெற்ற நேரமாக இருந்தாலும் சில முக்கிய பொறுப்பாளர்களை முகாம்களில் இருந்து விடுவித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல பணித்தது பொறுப்பாளர்களிடத்தில் வெறும் 500 ரூபாய்க்கும் குறைவான பணமே இருந்தாலும் ஹிந்து சமுதாயத்தமும், சங்கமும் நம் பின்னால் உள்ளது என களம் இறங்கினர்….
முதலில் அதிகம் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் களம் இறங்கினர் ஸ்வயம் சேவகர்கள். கிராமமே கடலில் மூழ்கியதை கண்டனர், உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து இருந்த மக்களை அரவணைத்தது RSS முதலில் என்ன தேவை என கண்டறியப்பட்டு திருப்பூர், கோவை, சென்னை, என் பல ஊர்களில் இருக்கும் தொழிலதிபர்களிடம் அந்த பகுதி ஸ்வயம் சேவகர்களிடம் பேசி பொருட்களை லாரி,லாரியாக இறக்கி சரியான நபர்களுக்கு தேவையான அனைத்தையும் அரசு கொடுக்கும் முன்னரே நம் சகோதரர்கள் கொடுத்தனர். அரசே அகற்ற தயங்கிய அழுகிய பிணங்களை ஸ்வயம் சேவகர்கள் அகற்றி சிதை மூட்டினர்…. இறந்த அத்துனை பேருக்கும் நம் மக்களே இறுதி சடங்குகளை செய்தனர். அவர்களின் வாரிசுகளை வரவழைத்து காரியங்களை செய்ய வைத்தனர்…. வீடுகளை இழந்த அத்துறை பேருக்கும் அரசு கொடுக்கும் முன்னரே பல பெரியவயர்களிடம் பேசி இலவசமாக தரமான இல்லங்களை கட்டிக்கொடுத்தனர். ஆனால் அவர்களை மதம் மாற்றாமல்… கிறித்துவர்களும், இசுலாமியர்களும் இன்னும் சில அமைப்புக்களும் சேவை என்கின்ற பெயரில் வந்தாலும் ஆத்மார்த்தமான சேவையை நம் மக்களை தவிர வேறு யாராலும் செய்ய முடியவில்லை…
தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் நம் மக்களின் ஆலோசனைகளை கேட்டு பல சேவா கார்யங்களை நம் மூலமாக செய்தனர். இதற்கு காரணம் RSS என்கின்ற ஓர் தேச பக்த அமைப்பே… தேசத்திற்காக வாழ்வோம், தேச நன்மைக்காக பணி செய்வோம் என கொடுத்த பயிற்சியே….
RSS யை பற்றி புரியாதவர்களுக்கு நாம் புதிர் தான். தேசத்தில் எந்த பேரிடர் வந்தாலும் முதலில் அங்கு செல்வது RSSதான்.
RSS ல் இணைந்து தேசப்பணியாற்றுவோம். தேசத்தை முன்னேற்றுவோம்…
“பாரத் மாதா கீ ஜெய்”