மேஷம் :
உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களினால் ஏற்பட்ட தடைகள் விலகும். வளர்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு எதிரிகளாக நினைத்தவர்கள் இனி இன்முகத்துடன் பழகுவார்கள். செயலாற்றல் அதிகரிக்கும். பணியிட மாற்றமும் பதவி உயர்வும் கிடைத்தால் ஏற்றுக் கொள்ளவும்.
பெண்மணிகள்: இளம் பெண்களுக்கு வரன்கள் கூடிவரும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி கிடைக்கும்.
மாணவமணிகள்: எதிர்பார்த்ததைவிட அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். முயற்சிகள் வெற்றி தரும்.சிறு
தொழில், வியாபாரம்: விரிவாக்கம் செய்வதால் தொழிலில் முத்திரை பதிப்பீர்கள். வாடிக்கையாளரால் வருமானம் கூடும்.
ரிஷபம்
உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இனிமையான பேச்சினால் ஊழியர்களின் உதவியை பெறவும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும்.
பெண்மணிகள்: குடும்ப ரகசியங்களை எவரிடத்திலும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும். சுபச் செலவுகள் ஏற்படும். கவனமாக பேச வேண்டும். இல்லறத்துணையின் ஆதரவை பெற வேண்டும்.
மாணவமணிகள்: தேர்வு முடிவுகளில் எதிர்பார்த்த அளவு இருக்காது. ஆசிரியரின் அறிவுரையை அணுகி கேட்கவும்.
சிறுதொழில், வியாபாரம்: புதுமைகளை புகுத்தி வளர்ச்சியைக் காணலாம். அரசியல்வாதிகள்: பதவியை காப்பாற்றிக் கொள்ளவும்.
மிதுனம்
உத்தியோகஸ்தர்கள்: முன்னேற்றமான காலம் நிகழ்வதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். தனவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்களால் நன்மை கிடைக்கும். உற்சாகத்துடனும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள். சகோதரர் வழியில் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.
பெண்மணிகள்: உடல் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். ஒரு சில நேரம் மனக்குழப்பம் ஏற்படும். இளம் பெண்கள் எச்சரிக்கையாகப் பழக வேண்டும். சிலரின் நடவடிக்கையினால் சஞ்சலம் ஏற்படும்.
மாணவமணிகள்: படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். நண்பர்களால் நன்மை உண்டு.
சிறுதொழில், வியாபாரம்: புதிய தொழிலினால் லாபம் உண்டு. வரவு–செலவுகளை கண்காணிப்பது அவசியம்.
கடகம்
உத்தியோகஸ்தர்கள்: உங்களின் எண்ணங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். நண்பர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்மணிகள்: குடும்பத்திற்குள் ஒற்றுமை மேலோங்கும். உங்களின் திட்டங்கள் நிறைவேற குடும்பத்தினர் ஆதரவளிப்பார்கள். இளம்பெண்களுக்கு இனிய சம்பவங்கள் நடைபெறும்.
மாணவமணிகள்: அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். எதிர்பாலினரிடத்தில் எச்சரிக்கை தேவை. எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும்.
சிறுதொழில், வியாபாரம்: முன்னேற்றம் தொடரும். கடின முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
சிம்மம்
உத்தியோகஸ்தர்கள்: கடினமான தங்களின் பணிகளுக்கு மத்தியில் நற்பலன்கள் நடைபெறும். சஞ்சலமான மனநிலை மாறி வளர்ச்சிக்கு ஏற்ற சிந்தனையுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் குறித்த கவலையும் பயமும் நீங்கும். கடன் பிரச்சினை தீரும்.
பெண்மணிகள்: இல்லறத்துணையின் அன்பைப் பெறுவீர்கள். இளம் பெண்களில் சிலருக்கு திருமணம் நடைபெறும். புதிய கலைகளை கற்றுக் கொள்வீர்கள். உறவினர்களின் மத்தியில் பெருமிதப்படுவீர்கள்.
மாணவமணிகள்: கல்வியில் நாட்டம் அதிகரிக்க கவனமும் அதிக முயற்சியும் தேவை.
சிறுதொழில், வியாபாரம்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க சிலரை பணியமர்த்தவும்.அரசியல்வாதிகள்: சூழ்ச்சிகளைத் தாண்டி தலைமையில் ஆதரவைப் பெறுவீர்கள்.
கன்னி
உத்தியோகஸ்தர்கள்: அன்றாடப் பணிகளின் சுமை குறையும். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். சிலருக்கு பணி நிரந்தரம் ஆகும். குழப்ப மனநிலை நீங்கி தெ ளிவாக செயலாற்றுங்கள். அவசர கதியில் எந்த பணியையும் செய்ய வேண்டாம்.
பெண்மணிகள்: குடும்பத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பொருள் செலவும் அதிகரிக்கும். தாய்வீட்டின் சொந்தங்களினால் அனுகூல பலன்கள் கிடைக்கும்.
மாணவமணிகள்: கல்வியிலும் வேலைவாய்ப்பு பெறுவதிலும் அதிக முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.
சிறுதொழில், வியாபாரம்: பலன் கிடைக்க தாமதமானாலும் தொழில் வளர முயற்சி தொடர்ந்து செய்துவர வேண்டும்.
துலாம்
உத்தியோகஸ்தர்கள்: பணியில் ஊழியர்களுடன் சிறு சிறு சண்டை சச்சரவு ஏற்படலாம். அனைவரிடமும் அமைதியுடன் பேச வேண்டும். புத்திசாலித் தனமாக செயல்பட்டால் பதவி உயர்வு கிடைக்கும். அனைவரின் ஆதரவையும் பெற்று பணியாற்றுங்கள்.
பெண்மணிகள்: குடும்பத்தில் ஒற்றுமை உருவாக்க அதிக முயற்சிகள் தேவை. கருத்து வேறுபாடுகளை விட்டு அனைவரிடமும் கனிவாகப் பேச வேண்டும்.
மாணவமணிகள்: உயர்கல்விக்கான வாய்ப்புகள் பெறுவதில் சில தடைகள் ஏற்படும். தகுதியை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
சிறுதொழில், வியாபாரம்: வளர்ச்சியில் மந்த நிலை ஏற்படும். போட்டியாளர்களால் லாபம் குறையும்.
விருச்சிகம்
உத்தியோகஸ்தர்கள்: இடமாற்றத்தையும், ஊர் மாற்றத்தையும் சந்திக்க நேரிடும். அதேசமயம் அதிகாரமும் அந்தஸ்தும் கிடைக்கும். இடையூறுகளை ஏற்படுத்தி வந்த சக ஊழியர்களின் தன்மை நன்மையாக மாறும்.
பெண்மணிகள்: தடை பெற்றிருந்த சுப காரியங்கள் நடைபெறும். இளம்பெண்களின் கனவு நனவாகும். தாய்மை விரும்பியவருக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் இணக்கம் ஏற்படும்.
மாணவமணிகள்: கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உயர்க்கல்வி கனவுகள் இனிதே நிறைவேறும்.
சிறுதொழில், வியாபாரம்: வாடிக்கையாளர்களின் வருகை குறையும் என்றாலம் வருமானம் குறையாது.
தனுசு
உத்தியோகஸ்தர்கள்: அலுவலகப் பணிகளில் வீண்பழி ஏற்படலாம். உயரதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களின் பாராமுகமும் மனதை பாதிக்கும். அனைத்தும் மாறி வெற்றியும் நிம்மதியும் கிடைக்கும்.
பெண்மணிகள்: ஆடை ஆபரணங்கள் கிடைக்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் ஏற்படும். வாக்குவாதம் தவிர்க்கவும். இளம்பெண்களின் விருப்பம் நிறைவேறும்.
மாணவமணிகள்: வெ ளி விவகாரங்களில் கவனம் செலுத்துவதை தவிர்த்து படிப்பில் கவனம் வைக்கவும்.
சிறுதொழில், வியாபாரம்: பங்குதாரர்களின் உதவியுடன் வளர்ச்சி கிடைக்கும்.
மகரம்
உத்தியோகஸ்தர்கள்: அதிகாரிகளின் ஆதரவால் சிறந்த பலன்களைப் பெறுவீர்கள், நெடுநாளைய சங்கடம் நீங்கும். அரசு வழியில் லாபம் ஏற்படும். புதிய பதவி, மரியாதை, அந்தஸ்து கிடைக்கும். சரீர திட ஆரோக்கியம், சுகம், லாபம் பெற முடியும்.
பெண்மணிகள்: வீட்டிற்குத் தேவையான பொருட்கள் நிறையும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் உற்சாகம் ஊற்றாக பெருகும்.
மாணவமணிகள்: உயர்க்கல்வி கனவுகள் நிறைவேறும். கல்வியிலும் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
சிறுதொழில், வியாபாரம்: தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகள் பலிக்கும். தனலாபமும் அதிகரிக்கும்.
கும்பம்
உத்தியோகஸ்தர்கள்: நம்பிக்கையுடனும் செயலூக்கத்துடனும் பணியாற்றுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணமும் கிடைக்கும். பெருந்தொகை ஒன்று கிடைக்கப் பெற்று அதன் மூலம் வருமானமும் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் வசதி வாய்ப்புகள் ஏற்படும்.
பெண்மணிகள்: வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலங்காரப் பொருட்கள், ஆடை ஆபரணங்கள் கிடைக்கும். வீடு, மனை என சொத்துகள் சேரும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
மாணவமணிகள்: கல்வியில் நாட்டம் ஏற்படும். நன்மதிப்பும் நல்ல மதிப்பெண்ணும் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் உயர்கல்விக்கு உதவி கிடைக்கும்.
சிறுதொழில், வியாபாரம்: தொழிலும் அபாரமாக வளரும். அந்தஸ்துள்ள பதவி கிடைக்கும். ராஜயோகத்துடன் வலம் வருவீர்கள்.
மீனம்
உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களின் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். உங்களுடைய அந்தரங்க விஷயங்களை எவரிடமும் பகிரக் கூடாது. கடுமையாக உழைத்த பலன், பெருமை மற்றவர்களுக்குக் கிடைக்கும். இதய நோய்க்கு உடனடியாக சிகிச்சை அவசியம் தேவை.
பெண்மணிகள்: குடும்பத்தில் நடைபெறும் விழா, விஷேசங்களில் உடல் உபாதைகளுக்கு உயர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தாய் வீட்டிலிருந்து ஆதரவு கிடைக்கும்.
மாணவமணிகள்: நிர்ணயத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். பெரும் பழிச் சொல் ஏற்படும். அலைச்சலைக் குறைக்கவும். படிப்பில் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்.
சிறுதொழில், வியாபாரம்: போட்டியாளர்களால் நஷ்டம் ஏற்படும். பயன்தராத முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.