வனவாசமாக வந்த ராமரும் சீதையும் சித்திர கூடத்தில் தங்கியிருந்தனர். அங்கு சீதை சமைத்து ராமருக்கு உணவு பரிமாறும்போது, ‘எப்படி இருக்கிறது?’ என்று கேட்பது வழக்கம். ராமரும், ‘ஆகா! பிரமாதம்!’ என்று சொல்லி ரசித்து உண்பார்.
உண்மையில் உணவின் ருசியை விட, சீதை மீதுள்ள அன்பினால் ராமர் விருப்பத்தோடு உண்கிறார் என்பது தெரிந்தாலும், சீதை உணவின் ருசியைப் பற்றிக் கேட்காமல் இருப்பதில்லை.
ஒருநாள், உணவு அதிக நேரம் அடுப்பில் இருந்துவிட்டதால் தீய்ந்து போனது. பரிமாறும் போது தயக்கத்துடன் சீதை, ‘எப்படி இருக்கிறது?’ என்று கேட்டும் விட்டாள்.
ஆனால், ராமர் ‘நன்றாகத்தான் இருக்கிறது’ என்று பொய் சொல்லவில்லை. சிரித்தபடி, நன்றாகத்தான் சமைத்திருக்கிறாய். ஆனால் அக்னி இருக்கிறானே அவன் சற்று கூடுதலாக எரிந்ததால் இப்படியாகிவிட்டது போலிருக்கிறது” என்றார்.
அப்படியானால் உணவில் ருசியில்லையோ?” என்றாள் சீதை.
ராமரோ, தீய்ந்தாலும் உன் கை பட்டதால் அதற்கு தனிச்சுவை வந்துவிட்டது” என்று சொல்லி அன்புடன் உண்டார்.
நீங்களும் வீட்டிலே சமையல் ஒரு மாதிரியாய் இருந்தாலும், கொஞ்சம் விட்டுக்கொடுத்து இதே மாதிரி சொன்னால் உங்கள் வீட்டிலும் சந்தோஷம்தான்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்