சொந்த காசில் சூனியம்

அடிக்கடி, தனக்குத் தானே கொள்ளி வைத்துக்கொள்ளும் திறமை ராகுல் தவிர வேறு யாருக்கு
வரும்?
2003ல் இவர் இங்கிலாந்தில் ஆரம்பித்த ஒரு கம்பெனி தான் இன்று அவர் கழுத்தை இறுக்கி
கறது. 2014 மே மாதம் வரை இவர் ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி. அதனால் இவரைக் கேட்க
யாருக்கு வரும் துணிவு?
இந்த 5 வருடங்களில் அடுக்கடுக்காக பல முறைகேடுகள், குற்றச் சாட்டுகள் இவர் மீதும்
இவரைச் சேர்ந்தவர்கள் மீதும் வருகின்றன.
2003ல் இங்கிலாந்தில் லண்டன் மாநகரிலிருந்து 90 கி மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு
கிராமத்தை முகவரியாகக் கொடுத்து இவர்கள் பாக்காப் செர்வீஸ் பிரைவேட் லிமிடேட் என்ற
நிறுவனத்தைப் பதிவு செய்துள்ளார்கள். இந்த நிறுவனத்தில் ராகுல் காந்தி முன்னர் 83 சதவீத
பங்குகளை வைத்திருந்தார். (பின்னர் தன் சகோதரி ப்ரியங்காவிற்கு கை மாற்றி விட்டார்)
இந்த கம்பெனியோ தொழிலுக்கு புதியது, ஆனாலும் இவர்களுக்கு மும்பை பன்னாட்டு விமான
நிலைய டெர்மினல் கட்டிடம் உள்பட பற்பல உயர் மதிப்பு காண்டிராக்டுகள் கையில் வந்து
விழுந்திருக்கின்றன. ( விழ வைக்கப் பட்டுள்ளன.- வேறென்ன அம்மா அறிவிக்கப் படாத பிரதம
மந்திரியாக நாட்டை செலுத்தி வந்தார் அல்லவா?)
எங்கே வருகிறது பிரச்சினை என்றால் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில்
வெளிநாட்டில் தொழில் தொடங்க முறைப்படி அரசு அனுமதியை இவர் பெறவில்லை. ( அப்படி
அனுமதி பெறுவதாயிருந்தால், இவருக்கு எங்கிருந்து வந்தது அத்தனை பணம் வந்தது கணக்கு
சொல்ல வேண்டுமே )
அதை விட பெரும் பிரச்சினை இரண்டாவது தான். ராகுல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளார்.
2005, 2006 ஆண்டு களில் தாக்கல் செய்த வருமான வரி படிவங்களிலும் அவர் தன்னை ஒரு
பிரிட்டிஷ் பிரஜையாகத் தான் குறிப்பிட்டுளார்.
குற்றச் சாட்டு நிரூபிக்கப் பட்டால், இவர் தன்னுடை ய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை
இழக்க நேரிடலாம்.
இந்த விவரங்களை வைத்துக் கொண்டுதான் மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் ராகுலை
உண்மை நிலவரத்தை உறுதி செய்யும் படி அவருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
சுப்ரமணியம் ஸ்வாமி இந்த விஷயத்தை கடந்த 4 வருடங்களாக கையில் எடுத்துக் கொண்டு
ராகுலுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டுள்ளார்.