காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் நட வடிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், ஹரியாணா முன் னாள் முதல்வருமான பூபேந்தர்சிங் ஹூடா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த மாவட்டமான ரொஹ தாக்கில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார். அதில், பூபேந்தர் சிங் ஹூடா பேசும்போது, ‘நான் தேசபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்தவன். தேசபக்தியின் மீது நான் யாரிடமும் சமரசம் கொள்ள மாட்டேன். காஷ்மீரின் 370 -வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு நான் ஆதரவளிக்கிறேன். காங் கிரஸ் கட்சி, தான் சென்று கொண் டிருந்த பாதையை மறந்துவிட்டது’ என பேசினார்.
காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள், ‘ஹூடா தலைமையில் ஹரி யாணாவில் நடைபெற்ற சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு தோல்வியே கிடைத்தது.தற்போது காங்கிரஸிலிருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்க ஹூடா குடும்பம் திட்டமிடுகிறது’ என்றனர்.
எனவே, வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஹூடா தனிக்கட்சி துவங்கி போட்டியிடும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப் படுகிறது.