ஏப்ரல் 26 அன்று சென்னையில் நடந்த விஜய பாரதம் பிரசுரத்தின் முப்பெரும் விழாவில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து…
அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசக்குமாரி ஒருவர் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே வேறு ஒரு தேசத்துக்கு சென்றார். அந்த தேசத்தைச் சேர்ந்த அதிபர், பிரதமர் பாரதத்திற்கு வந்த பிறகு, உங்கள் நாட்டிலிருந்து ஒரு அரசியார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். ஆகவே, நாங்கள் அவருடைய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். நாங்களும் பாரதியர்கள் தான் என்று தெரிவிக்கின்றனர்.
அந்த அரசகுமாரின் பெயர் ‘சுரி ரத்னா’. அதன் தாக்கம் என்னவென்றால், இன்றும் கொரிய மொழியில் 500 தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன. வீட்டில் அவர்கள் தினமும் பயன்படுத்தும் வார்த்தைகள் ‘அம்மா’, ‘அப்பா’,’ கொஞ்சம்’, ‘இப்படி’, என்று எத்தனையோ வார்த்தைகள். சுரி ரத்னா அங்கே சென்று அந்த நாட்டையே தமிழ் – பாரத மண்ணாக மாற்றி இருக்கிறார்.
நம்முடைய சரித்திரத்தில், இதெல்லாம் மிகக் குறைவாக இருக்கிறது. தமிழர்கள் தென்கிழக்கு ஆசியாவிற்கு சென்றார்கள், ராஜேந்திர சோழன் சென்றார் என்றுதான் படித்திருக்கிறோம். சேரர்கள், கேரளாவின் மேற்கு புறத்தில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், இங்கே இருந்து நாம் ரோமாபுரி, கிரேக்க நாட்டிற்கு எல்லாம் சென்றிருக்கிறோம், அந்நாட்டின் காசுகள் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. 2,000 ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம் செய்ய நாம் ஐரோப்பாவிற்கு சென்றிருக்கிறோம். ஜரோப்பாவிற்கு செல்லும்போது, வழியே அரேபிய நாடு வருகிறது. எப்படி நாம் முருக கடவுளின் மயில், பாம்பை வழிபடுகிறோமோ? அதேபோன்று அரேபியாவில் ஒரு கூட்டம் பாம்பையும், மயிலையும் வழிபடுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அவர்களை ‘யாசிதிகள்’ என்று கூறுவார்கள்.
அச்சமூகத்தைச் சேர்ந்த பெண்மணிகள் நெற்றியில் திலகம் வைத்திருப்பார்கள், பொட்டு வைத்திருப்பார்கள். நாம் எப்படி பூஜை செய்கிறோமோ? ஆரத்தி எடுப்போமோ? அதேபோன்று அவர்களும் செய்வார்கள். கடவுள் பெயர் மட்டும்தான் வேறு. அவர்களும் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டவர்கள். அண்மையில், சிரியாவில் மிகப்பெரிய கலவரம் ஒன்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான யாசிதிகள் கொல்லப்பட்டார்கள். இதனை யார் செய்கிறார்கள் என்றால், அங்கே இருக்கும் ‘க்ரூஸ்’ எனும் இன மக்கள் தான் செய்கிறார்கள். இந்த க்ரூஸ் இன மக்களின் பெயர்கள் எல்லாம் முஸ்லிம்களின் பெயர்கள்தான். அவர்கள் ஏன்? இவர்களை கொல்கிறார்கள் என்றால், இவர்கள் ஒரே ஒரு கணவன், ஒரே ஒரு மனைவி என்ற கொள்கையை கொண்டவர்கள். இந்தக் கருத்து எங்கிருந்து வந்திருக்க முடியும்? இதனை தமிழர்களே தந்திருப்பார்கள்.
நான்கு மனைவி வேண்டுமே, 400 பெண்களையும் வைத்திருக்கலாமே என்றெல்லாம் இருக்கும் அவர்கள் சரித்திரத்தில் ஒருவனுக்கு, ஒருத்தி என்ற கருத்தை எப்படி ஏற்பார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்கள், யாசத்தி மக்களை தொடர்பு கொண்டு, அவர்களின் விடுதலைக்காகவும், ஒரு தனி தேசம் அமைப்பதற்காகவும் பாடுபட்டு வருகிறார்கள்.
நம்முடைய தமிழர்களுக்காக நாம் வேலை செய்ய வேண்டும். ஹிந்துக்களுக்காக வேலை செய்ய வேண்டும், அதனால் இன்னும் சில கருத்தை கூறுகிறேன்.
நான் பல ஆண்டுகள் சீனாவில் இருந்திருக்கிறேன். அங்கு புத்தருக்காக எத்தனையோ கோயில்கள் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அங்கு கோயில் ஒன்று உள்ளது. அவர் பெயர்தான் ‘போதி தர்மர்’. சீனாவில் அவரை ‘தி ஃபாதர் ஆஃப் தி நேஷன்’ என்று கூறுகிறார்கள். எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு நாட்டின் தந்தை வேறொரு தேசத்தைச் சேர்ந்தவர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் என்று. 50 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் அவருக்கு ஒரு சிலை கூட கிடையாது.
அதேபோல், 1500 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டை ஆண்ட அரச பரம்பரைகளில் பல்லவர்களும் உண்டு. அந்த பல்லவர்களில் மூத்தவர்தான், தமிழ் நாட்டை ஆண்டார். அவருடைய தம்பி வேறொரு தேசத்துக்குச் சென்றார். அது வியட்நாம். அங்கே பல்லவ ஆட்சி புரிய தொடக்கத்தை ஏற்படுத்தினார்.
அவர், பெயர் பேர் பீமவர்மன். 200 ஆண்டுகள் கழித்து, காஞ்சிபுரத்தில் இருந்த அரசன் வாரிசே இல்லாமல் இறந்துவிட்டார். அப்போது, இங்கு ஆட்சி புரிய பல்லவ வம்ச வித்துக்கொண்ட ஒரு பையனைதான் அரசனாக நியமிக்க வேண்டும் என தீர்மானித்தனர். என்ன செய்வது, இவருக்கோ வாரிசு இல்லை. அதனால், தமிழ்நாட்டில் இருந்து எல்லோரும் வியட்நாமுக்கு சென்றார்கள். அங்கே ஆட்சி புரிந்து வந்த அரசருக்கு நான்கு மகன்கள். அக்குழந்தைகளில் இருந்து ஒரு குழந்தையை தங்களுக்கு கொடுக்குமாறு கேட்கிறார்கள். அவர்களும் 12 வயது சிறுவன் ஒருவனை தருகிறார்கள், அவன் பெயர் பல்லவ மல்லா. இன்று வரை பாரதத்துக்கும், வியட்நாமுக்கும் மிகச் சிறந்த உறவு உள்ளது என்றால், அதற்கெல்லாம் வித்திட்டவர்கள் நம்முன்னோர்கள். அந்த பல்லவ மல்லவன் பாரதத்துக்கு 12 வயதில் வருகிறான். பிறகு அவனுக்கு ‘நந்திவர்மன் தி செகண்ட் ‘ என்று பெயர் வந்தது. அவன்தான் மிகப்பெரிய பிரம்மாண்டமான கோயிலை எழுப்புகிறான். அதுதான் வைகுண்ட பெருமாள் கோயில்.
சீனாவுக்கு மிக அருகே உள்ள நாடு வியட்நாம். அந்நாட்டின் மீது படையெடுக்க, சீனா போர்க் கப்பலை அனுப்பியது. பதிலுக்கு பாரதம் தன்னுடைய போர்க்கப்பலை அனுப்பி அந்நாட்டை பாதுகாத்தது. இப்படி நமது நாட்டுக்கும், வியட்நாமுக்கும் மிகச் சிறந்த நட்பு இருக்கிறது. பாரதம் அவர்களுக்கு ஒரு போர்க் கப்பலையே பரிசாக கொடுத்திருக்கிறார்கள்.
அந்தச் சம்பந்தத்தை வைத்து, நல்ல உறவுகளை நமது நாடு ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியா, ஜாவா, கம்போடியா, கொரியா எங்கெங்கெல்லாம் தமிழர்கள் ஆட்சி செய்தார்களோ, தமிழர்கள் எங்கெல்லாம் சென்று வந்தார்களோ, அங்கெல்லாம் பராத அரசாங்கம் மிகச் சிறப்பாக அவர்களுடன் நல்லுறவு வைத்திருக்கிறார்கள்.