தமிழர்கள் புத்தாண்டை கொண்டாடு வதைப்போல மலையாளிகள் விஷுவை கொண்டாடுவது மரபு. விஷுவை ஒட்டி பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். இதனால் விளம்பரங்களுக்கும் பஞ்சமிருக்காது.
மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல்லில், உள்ள காவல் நிலையத்தில் `அரேபியன் மஜ்லிஸ்’ உணவகம், `ரெய்டன்’ உணவகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுமம் கேரளாவின் பல இடங்களிலும், வளைகுடா நாடுகளிலும் உணவகங்களை நடத்தி வருகிறது.
விஷுவை ஒட்டி வெளியிட்டவிளம்பரத்தில் பகவான் கிருஷ்ணர் முன் பொரித்த கோழி உள்ளிட்ட உணவு வகைகள் படைக்கப்பட்டுள்ளதாக காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. இதற்கு எதிராக கேரள மக்கள் கொதித்தெழுந்தார்கள். புகார்கள் குவிந்தன. இதையடுத்து பாரதிய நியாய சன்ஹிதாவின் 192வது பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மலப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் யமாமா ஷவாயா உணவகம் மீதும் இதுபோன்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது இந்த உணவகம் வெளியிட்ட விஷு விளம்பரத்தில் பகவான் கிருஷ்ணர் முன் வகைவகையான இறைச்சி படைக்கப்பட்டு காட்சிப் படுத்தபட்டிருந்தது. இதுவே வழக்கு பதிவு செய்ய காரணமானது.
இதைப்போல ஆலப்புழா மாவட்டத்திலும் சர்ச்சை உச்சம் பெற்றது. இம்மாவட்டத்திலுள்ள சேர்த்தலாவில் `மெஹர் மண்டி கிரில்ஸ்’ என்ற உணவகம் இயங்கி வருகிறது. முகமது ஷெமிர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த உணவகம் வெளியிட்ட விஷு விளம்பரத்தில் பகவான் கிருஷ்ணர் முன் கோழி பிரியாணி படைக்கப்பட்டிருந்தது. இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அமைப்பின் நிர்வாகிகள் புகார் கூறியதை அடுத்து, சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது
கேரளத்தில் ஜனத்தொகை அடிப்படையில் ஹிந்துக்களே முதலிடத்தில் உள்ளனர். மாநிலம் முழுவதிலும் ஹிந்துக்கள் பரந்துள்ளனர். ஆனால் வடக்கு கேரளத்தில் முஸ்லிம்களும், தெற்கு கேரளத்தில் கிறிஸ்தவர்களும் குறிப்பிட்ட சில பகுதியில் கணிசமாக உள்ளனர். இதனால்தான் ஹிந்து மத சம்பிரதாயங்களை கேவலப்படுத்தும் வகையில், விளம்பரங்களை வெளியிடும் போக்கு கேரளத்தில் அதிகரித்து வருகிறது.
கேரளத்தில் ஹிந்துக்களிடையே விழிப்புணர்வு மேலோங்கி வருவது வரவேற்கதக்கது. மலப்புரம் உள்ளிட்ட பகுதியில் இஸ்லாமிய வெறியர்கள் அரங்கேற்றிய வெறுப்பு அடாவடித்தனத்தை ஹிந்துக்கள் உடனடியாக தட்டி கேட்டதால்தான், ஜிகாதிகளின் கொட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பிற மதத்தினரை அவமதிக்கும் நடவடிக்கைகளில், ஹிந்துக்கள் ஈடுபடுவதில்லை. ஆனால் துரதிருஷ்டவசமான ஹிந்துக்களை அவமதிக்கும் நடவடிக்கைளில் பிற மதத்தினர் தொடர்ந்து ஈட்டுபட்டு வருகிறார்கள். இது மக்களிடைய பதற்றத்தையும், பகைமையையும் உச்சப்படுத்துகிறது. இதற்கு முடிவுரை எழுதினால் தான், சமூகத்தில் நல்லிணக்கம் தழைத்தோங்குவது சாத்தியமாகும்.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி