kh‰w«: rhkhÅauhš rhkhÅaU¡fhf
சங்கம் தந்த குறிப்பின்படி கடந்த ஓராண்டில் ஸ்வயம்சேவகர்கள் பஞ்ச பரிவர்த்தன் (ஐந்து மாற்றங்கள்) முயற்சியின் அங்கமாக பிளாஸ்டிக் தவிர்ப்பு, தண்ணீர் சேமிப்பு, மரம் நட்டு பராமரித்தல் ஆகியவற்றை தங்கள் குடும்ப அளவில் எப்படி எல்லாம் நடைமுறைப்படுத்த முடிந்திருக்கிறது என்பதை அவரவர் ஊர்களில் அனைவருக்கும் தெரியப்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்ற பாராட்டத்தக்க முன்னெடுப்பு மேற்கொண்டு வருகிறார்கள்.
உதாரணமாக திருப்பதி நகரில் வெங்கடேச கிருபை ஷாகா ஸ்வயம்சேவகர்கள் 25 பேர் வாரம் ஒரு முறை பத்து நிமிட நேரம் சந்திப்பார்கள். அந்த சந்திப்பின் போது அவரவர் வீடுகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் பிளாஸ்டிக் பைகளை திணித்து ஈகோ பிரிக் தயார் செய்யும் முயற்சி நடந்ததால் மக்காத குப்பை வெகுவாக குறைந்தது என்பது போன்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். தண்ணீர் சேமிப்பு விஷயத்தில் தங்களால் என்னென்ன உத்திகளை மேற்கொள்ள முடிந்தது என்று விவரம் பரிமாறிக் கொண்டார்கள். இதுபோன்ற முயற்சிகளால் குடும்பத்தில் ஏற்பட்ட நல்ல மாற்றம் பற்றி எடுத்துச் சொல்ல அவர்களுக்கு பயிற்சியும் கிடைத்தது. இவ்வாறு நான்கு வாரங்கள் சந்தித்தபின் அவர்களுடைய பஸ்தியில் மக்களிடம் இதை எல்லாம் எடுத்துக் கூறினார்கள். அதன் விளைவாக ஸ்வயம்சேவகர்களால் 500 குடும்பங்களில் இருந்து எவர்சில்வர் தட்டு, கிண்ணம், டம்ளர் சுலபமாக சேகரிக்க முடிந்தது. திருப்பதிக்கு வரும் யாத்திரிகர்களுக்கு அன்ன பிரசாத நேரத்தில் தந்து உதவ அந்த பஸ்தியில் சூழல் மாசுபாட்டை குறைக்கும் இந்த ஏற்பாடு இவ்வாறு வெற்றிகரமாக தொடங்கியது.
துல்லியமாக இதே போல, ஹரியானா மாநிலம் பாஸலாம்பி கிராமத்தில் நடைபெறும் கோபால் ஷாகா ஸ்வயம்சேவகர்கள், தங்கள் வீடுகளில் கடைக்குப் போகும்போது துணிப்பை எடுத்துச் செல்லும் பழக்கம் ஏற்பட்டிருப்பதை பரிமாறிக் கொண்டார்கள். இந்த விஷயத்தை ஊர் முழுவதும் பரப்பினார்கள். அதன் விளைவாக ஊரார் ஒத்துழைப்புடன் 5,000 துணிப்பை சேகரித்து வழங்கி ஊர் மக்கள் மனதில் சூழல் சினேகிதமான எண்ணத்தை பதிவு செய்துவிட்டார்கள்.
அதைவிட முக்கியம், மக்கள் மனப்பான்மையில் ஏற்பட்டு வரும் மாற்றம். ‘என் தேசம் நலமாக திகழ வேண்டும்; என் நாட்டு மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்; அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை என்னில் இருந்து தொடங்குவேன்’ என்ற உறுதி, அதன் தொடர்ச்சியாக நடத்தை, ஆகியவை சாமானிய மக்கள் மத்தியில் ஆங்காங்கு தென்பட தொடங்கியிருப்பது சாமானியமான மாற்றம் அல்ல; இது சாமானியர்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றம்.