1963 குடியரசு தின அணி வகுப்பில் ஆர்.எஸ்.எஸ்

சீனா நமது நாட்டின் மீது 1962ல் படையெடுத்து வந்த போது, ஆர்.எஸ்.எஸ். சற்றும் தாமதிக்காமல் அரசுக்குத் தன் முழு ஆதரவைத் தெரிவித்தது. ஆதரவு என்பது அறிக்கையளவில் அல்ல, தொழிற்சங்க அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம், அந்தக் கணம் வரை தான் போராடி வந்த அனைத்து விஷயங்கள் குறித்தான கோரிக்கைகளையும் அப்படியே தள்ளிப்போடுவதாக அறிவித்தது. நெருக்கடியான காலக்கட்டம்.

அரசுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் பி.எம்.எஸ். இப்போது நடத்தாது. தவிரவும் உற்பத்திப் பணிப் பிரிவில் பணியாற்றும் அனைத்து பி.எம்.எஸ் ஊழியர்களும், தற்செயல் விடுப்புக் கூட எடுக்க மாட்டார்கள். வாகனங்கள், ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் பாரதிய மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள், இருபத்தி நான்கு மணிநேரமும் பணிபுரியத் தயாராக இருப்பார்கள். நிர்வாகத்தின் கட்டளை எதுவாக இருந்தாலும், பதில் பேசாமல் செய்து முடிப்பார்கள்.

இது சாதாரணமான விஷயமல்ல. இடதுசாரித் தொழிற்சங்கப் பணியாளர்கள் தேசிய அபாயம் வந்தபோதும் கூட, சீனாவை ஆதரித்தார்கள். ‘இந்தியாவை விடுவிப்பதற்காக சீனப்படைகள் வந்திருக்கின்றன’ என்று பேசினார்கள். அதன் சில தலைவர்கள், ‘இதை இந்தியா – சீனா என்ற இரு தேசங்களின் யுத்தமாகப் பார்ப்பதை விட, கம்யூனிசம் – கேபிடலிசம் என்னுமிரு சித்தாந்தங்களின் மோதலாகப் பார்க்க வேண்டும்’ என்று பேசி, தங்களுக்கு உள்ள சீனா மீதான விசுவாசத்தை காட்டினார்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர்.

தேசத்தில் உற்பத்தித் துறை சார்ந்து எந்தப் பெரும் சிக்கலும் எழாதிருக்க பாரதிய மஸ்தூர் சங்கம் மேற்கொண்ட கவனமும், முயற்சிகளும் மிக முக்கியமானவை என அன்றைய பிரதமர் நேருஜி தலைமையிலான மத்திய அரசே பாராட்டியது.

தன்னலம் கருதாது சங்க ஸ்வயம்சேவகர்கள் செய்த பணிகளைப் பாராட்டும் வகையில், 1963 ஜனவரி 26ம் தேதி குடியரசு தின அணிவகுப்புக்கு ஆர்.எஸ்.எஸ். கலந்து கொள்ள, அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு அழைப்பு விடுத்தது. தகவல் சரியாக இரண்டு நாள் முன்னதாகத்தான் ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு அனுப்பப்பட்டது. கூட்டம் கூடிப் பேசவோ, ஆள்களைத் தேர்ந்தெடுக்கவோ வெகு நிச்சயமாக நாற்பத்தி எட்டு மணிநேர அவகாசம் போதாது. ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு என்றில்லை. எந்த ஓர் அமைப்புக்குமே.

ஆனால் அன்று பொழுது விடிந்தபோது, தேசம் முழுவதுமிருந்து, டெல்லியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் சங்க சீருடையில் அணிவகுத்தார்கள். தேசமே பார்க்க டெல்லி வீதிகளில் பேண்ட் வாத்தியச் சத்தம் முழங்க நடந்து சென்றபோது, காங்கிரஸ்காரர்களில் சிலர் முகம் சுளித்தார்கள்.

அவர்களை நோக்கி அன்றைய பாரத பிரதமர் நேரு சொன்னார், தேசபக்தி மிக்க அத்தனை பேருக்குமான அழைப்பு இது. தேசபக்தர்கள்தான் கலந்துகொண்டிருக்கிறார்கள். யாரும் முணுமுணுக்க வேண்டாம்.
இதுதாங்க ஆர்.எஸ்.எஸ்!