ஹிந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாட்டில் எப்படி செயல்பட வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கிறார்களோ, அதை நிறைவு செய்யும் வகையில் செயல்படவில்லை என்ற கருத்து பரவலாக மேலோங்கியுள்ளது.
இதை நிரூபிப்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. இந்த பட்டியலில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஸ்ரீ அண்ணாமலைநாதர் கோயில் விவகாரமும் இடம்பெற்றுள்ளது.
1992ம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி ஸ்ரீ அண்ணாமலைநாதர் கோயில் அறங்காவலர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். கோயிலுக்கு சொந்தமான 3.93 ஏக்கர் நிலத்தை விற்பதுதான் அந்த தீர்மானம் ஆகும்.
இந்த தீர்மானத்தை ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் அறங்காவலர்கள் சமர்ப்பித்தனர். இவ்வாறு செய்ய அவர்களுக்கு சட்டப்படி உரிமை கிடையாது. கோயில் சொத்தை விற்பது எளிதல்ல. அரிதிலும் அரிதாகவே, நிலத்தை விற்கலாம். ஏதேனும் நொண்டி சாக்கை கூறி நிலத்தை விற்க கூடாது.
ஹிந்து சமய அறநிலையத்துறை அடிக்கடி தனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டுள்ளது. அறநிலையத்துறை, நிலத்தை ஏலம் விட 1994 ஆம் ஆண்டு ஜூலை 21 தேதி அனுமதி அளித்தது. இதையடுத்து, ஏலம் நடவடிக்கை அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது.
கோயில் நிலம் விற்பனை தொடர்பாக அறநிலையத்துறை ஆணையரிடம் ஒப்புதல் பெறவில்லை. ஏலம் தொடர்பான அறிவிப்பும் முறைப்படி வெளியிடப்படவில்லை. அப்போது, அறநிலையத்துறை ஆணையராக இருந்த மெய்கண்டதேவன் 1997 ஆம் ஆண்டு, மே மாதம் 16 ஆம் தேதி, அறிவித்தார்.
ஏற்கனவே நடைபெற்ற ஏலம் சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவித்தார். ஆனால் அதற்குள் நிலைமை கட்டுமீறி சென்று விட்டது. நிலத்தை சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 90 நபர்கள் தங்கள் வசப்படுத்தி கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் மசூதியும், வீடுகளும் எழுப்பபட்டுவிட்டன.
சுமார் 30 ஆண்டுகளாக இந்தப் போராட்டம் நீடித்து வந்தது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற அமர்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது.
கடையநல்லூர் ஸ்ரீ அண்ணாமலைநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலம் கோயிலுக்கே சொந்தமானது என்பதை உயர்நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்தியது. இந்த தீர்ப்பு 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி முறைப்படி பிரசுரிக்கப்பட்டது.
ஆனால், துரதிருஷ்ட வசமாக, ஊடகங்கள் இதை இருட்டடிப்பு செய்து விட்டன. மூன்று சதாப்பதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ள 3.93 ஏக்கர் நிலத்தின் இன்றைய மதிப்பு ரூ. 110 கோடியாகும்.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முன்னுதாரணமாக விளங்கக் கூடியது. இதன் அடிப்படையில், மற்ற கோயில்களின் நிலங்களையும், மீட்க முடியும் என்ற நம்பிக்கை வலுவடைந்துள்ளது.
இந்த 31 ஆண்டுகால விவகாரத்தில் அறநிலையத்துறை ஊசலாட்டமாகவே செயல்பட்டுள்ளது. இந்த வழக்கில் கோயில் நிலத்தை மீட்பதற்காக வாதாடிய வழக்கறிஞர்கள், அபினவ் சாரதி, சங்கரநாராயணன், சதீஸ் பராசரண், எஸ், பார்த்தசாரதி, ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து
தமிழில் : நிகரியவாதி