அணுசக்தி துறையில் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ள சாந்தி சட்டம் – 2025

அணுஉலைகளை உருவாக்குவதிலும், நிர்வகிப்பதிலும் தனியாருக்கு ஊக்கமளிக்கும் வகையில் கதவு திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் உரிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசு தவறவில்லை. அணுசக்தி துறையில், தனியாருக்கு இடம் கொடுப்பது பேராபத்து என்பது அடிப்படை ஆதாரமற்ற, அபத்தமான விமர்சனமாகும்.

பல்வேறு துறைகளிலும் பாரதம் முன்னேறி வருகிறது. சுதந்திர நூற்றாண்டின் போது வளர்ந்த பாரதத்தை நனவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமர் நரேந்திரே மோடி தலைமையிலான அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருக்கிறது.

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சாந்தி மசோதா – 2025 நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்ததை அடுத்து ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, சாந்தி சட்டம் -2025 நடைமுறைக்கு வந்து விட்டது.

ஏற்கனவே அணுசக்தி தொடர்பாக 1962 வருட அணுசக்தி சட்டம், அணுவால் ஏற்படும் சேதத்துக்கு நிவராணம் அளிப்பது தொடர்பாக 2010 வருடம் கொண்டு வரப்பட்டது. இப்போது, அணுசக்தி தொடர்பான நிலைப்பாடு சர்வதேச அளவில் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

இதற்கு ஈடுகொடுக்கும் வகையில், பாரதமும், தகவமைத்துக்கொள்ள வேண்டிய நிலை உருவானது. இப்பிண்ணனியில்தான் சாந்தி சட்டம் – 2025 கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

“நவீன காலத்திற்கு ஏற்ப இந்த சட்டத்தில் ஷரத்துக்கள் இடம் பெற்றுள்ளன. அணுஉலைகளை உருவாக்குவதிலும், நிர்வகிப்பதிலும் தனியாருக்கு ஊக்கமளிக்கும் வகையில் கதவு திறந்து விடப்பட்டுள்ளது.

ஆனால், அதே நேரத்தில் உரிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசு தவறவில்லை. அணுசக்தி துறையில், தனியாருக்கு இடம் கொடுப்பது பேராபத்து என்பது அடிப்படை ஆதாரமற்ற, அபத்தமான விமர்சனமாகும்.

இது பசுமை சார்ந்த இலக்கை அடிப்படையாக கொண்டு இருக்கும். இந்த சக்தி மிகவும் தூய்மையானது. தனியாருக்கு ஊக்கம் அளிப்பதால் இளைஞர்களின் கனவுகள் நனவாகும். வேலை வாய்ப்பு பெருகும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

‘’சர்வதேச அளவிலான தரகோட்பாடு களையே நாமும் நடைமுறைப் படுத்தியுள்ளோம். சாந்தி மசோதாவால் பாதுகாப்பிற்கோ அல்லது வேறு ஏதேனும் முக்கியத்துறைக்கோ பாதிப்பு துளியும் ஏற்படாது.

செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பாக, உரிய கண்காணிப்பும், கட்டுப்பாடும் அமலாக்கப்படும்’’ என்று மத்திய அணுசக்தி துறையின் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரே சிங் கூறியுள்ளார்.

அணுசக்தியை தனியாருக்கு மத்திய அரசு தாரை வார்த்து கொடுக்கிறது என்ற விமர்சனமும் உண்மைக்கு புறம்பானது. உரிமம் அளிப்பது முதல் கண்காணிப்பு, கட்டுப்பாடு போன்றவற்றில் திடமாக இருப்பதன் வாயிலாக, அரசை மீறி தனியார் எவரும் செயல்பட முடியாது.

அணுஉலையில் இருந்து ஏற்படும் கதிர் வீச்சால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று விமர்சிக்கப்படுகிறது. சில மருத்துவ நடைமுறைகளைக் காட்டிலும், குளிர்விப்பு நிலையங்களைக் காட்டிலும், அணுசக்தியால் ஏற்படும் கதிர் இயக்க பாதிப்பு குறைவானதுதான். இந்த கதிர் இயக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும்.

அணுசக்தியால் தயாரிக்கப்படும் மின்சாரம், அதிக செலவு கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுவதிலும் உண்மை இல்லை. இந்த அணு ஆலைகள் 60 ஆண்டுகள் முதல் 80 ஆண்டுகள் வரை இயங்கக் கூடும்.

இந்த ஆலைகள் 24 மணி நேரமும் இயங்கும். முதலில் அதிக செலவு ஏற்பட்ட போதிலும், அதிக ஆண்டுகள் இவை பயன்பாட்டில் இருக்கும் என்பதால் மின்சார கட்டணம் உயர வாய்ப்பு இல்லை.

அணு சக்தி என்பது மின்சாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே இது உபயோகப்படுத்தப்படும் என்பதிலும் உண்மை இல்லை. இது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்துறை, வேளாண்மைத்துறை, தொழில்துறை, நீர்மேலாண்மை போன்றவற்றில் அணுசக்தியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் சிகிச்சைக்கும், உணவு பொருட்களை கெடாமல் பாதுகாப்பதற்கும், உப்பு நீரை சுத்திகரித்து தூய்மையான நீரை வழங்குவதற்கும் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான நாடுகள், மாறிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அணுசக்தி துறையில், மாற்றங்களை புகுத்தி கொண்டே இருக்கின்றன. தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கின்றன.

பாதுகாப்பு அம்சத்தில், எதையும் நீர்த்த போக அனுமதிக்க மாட்டோம் என்பதிலும் மெத்தமனமாக இருக்க மாட்டோம் என்பதிலும் அரசு திடமாக உள்ளது.

பாரதம் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. 2047ல் நாம் சுதந்திர நூற்றாண்டு விழாவை கொண்டாடுவோம். இத்தருணத்தில் அணுசக்தி துறையிலும் சர்வதேச அரங்கில் பாரதம் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதை கருப்பொருளாக கொண்டுதான் சாந்தி சட்டம் -2025 கொண்டுவரப்பட்டுள்ளது.

கட்டுரையாளர்: இயற்பியல் பேராசிரியர், லக்னோ
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி