புதிய 125 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை வரவேற்கும் பாரதிய கிசான் சங்கம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (MGNREGA) சட்டத்திற்கு பதிலாக மாற்று சட்டத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். கடந்த 20 ஆண்டுகளாக MGNREGA வின் கீழ், நாடு முழுவதும் பல லட்சம் கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது. செலவு செய்த பணத்தில் 10 சதவீதம் கூட நிரந்தர உட்கட்டமைப்பு வசதி உருவாக்கப்படவில்லை. இதனால் பல மணி நேர மனித உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது. விவசாயப் பணிகளுக்கு பணியாளர்கள் கிடைக்காததால் பாதிப்பு ஏற்பட்டது.

நீர் தொடர்பான பணிகள் மூலம், நீர் பாதுகாப்பை உறுதி செய்து, ஒட்டுமொத்த கிராம உட்கட்டமைப்பு வளர்ச்சி, வாழ்வாதாரம் சார்ந்த உட்கட்டமைப்புகளை பெருக்குகிறது. மோசமான வானிலை மற்றும் இயற்கை பேரிடர், அவசர கால நிலைமையை சமாளிக்க சிறப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

வரவேற்கத்தக்க சிறப்பு அம்சங்கள்:

  1. அந்தந்த மாநிலங்களில், அந்தந்த பகுதிகளில் விவசாயப் பணிகள் அதாவது விதைப்பு/ நடவு மற்றும் அறுவடை காலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது.
  2. வேளாண் பருவ காலங்களில் விவசாயப் பணிகளுக்கு பணியாளர்கள் கிடைக்க இந்த நடவடிக்கை ஆகும்.
  3. பழைய சட்டத்தின் படி, 100 நாளாக இருந்த பணி நாள், புதிய சட்டத்தில் 125 நாளாக உயர்த்தப்பட்டுள்ளது.
  4. பணிக்காலங்களில் தொழிலாளி பணி கேட்டு பதிவு செய்து, 15 நாட்களுக்குள் பணி வழங்கப்படவில்லை எனில், மாநில அரசு தொழிலாளிக்கு படிக்காசு வழங்க வேண்டும்.
  5. திட்டத்தை மேற்பார்வையிட, ஜி.பி.எஸ் அல்லது மொபைல் போன் மூலம் கண்காணிக்கப்படும்.
  6. மோசடி மற்றும் ஊழல்களை தடுக்க ஏ.ஐ. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
  7. இத்திட்டத்திற்கு முன்னர் மத்திய அரசு 100 சதவீத நிதியை வழங்கி வந்தது. ஆனால் புதிய சட்டத்தின்படி நிதி பங்களிப்பினை மத்திய மற்றும் மாநில அரசுகள் முறையே 60: 40 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
  8. மத்திய அரசு வகுக்கும் வழிகாட்டுதலின்படி, மாநில அரசுகள் உட்கட்டமைப்பு பணிகளை செயல்படுத்த வேண்டும்.

மேலும் MGNREGA வில் உள்ள குறைகளை கலைந்து, விவசாயப் பணிகளுக்கு ஆள் கிடைக்க வழி வகுக்க VB-G RAM G [Viksit Bharat Guarantee For Rozgar And Ajeevika Mission (Grameen)] என்ற புதிய சட்டம் ஏற்ற முன்வந்த மத்திய அரசை பாரதிய கிசான் சங்கம் மனமார பாராட்டி, தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

கட்டுரையாளர்: தேசிய துணைத் தலைவர், பாரதிய கிசான் சங்கம்