அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் 71வது தேசிய மாநாடு சமீபத்தில் உத்தராகண்டின் டேராடூனில் உற்சாகமாக நடைபெற்ற சூழலில், “மாணவர் நலன் – தேசிய நலன்” என்ற ஒரே இலக்கை மையமாக கொண்டு, கல்வி, சமூகம், நாடு ஆகியவற்றுக்காக தொடர்ந்து பணியாற்றும் ஓர் வலிமையாக செயல்படும் இளைஞர் அமைப்பு என்பதால் இந்த மாநாடு அனைத்து தரப்பு மக்களையும் கவனிக்க வைத்து உள்ளது.
இந்த மாநாட்டை முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ். சோமநாத் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் முன்னிலையில் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் மாநில/ பிராந்திய மாணவர் பிரதிநிதிகள், தேசிய & மாநில தலைவர்கள், கல்லூரி & பல்கலைக்கழக தலைவர்கள், அறிவியல், கல்வி துறையின் முக்கிய விருந்தினர்கள், பெண்கள் பிரதிநிதிகள், அமைப்பாளர்கள் மற்றும் இணைப்பாளர்கள், முன்னாள் ஏ.பி.வி.பி தலைவர்கள் என ஆயிர கணக்கான ஏ.பி.வி.பி.யின் பல முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில், ராகுராஜ் திவாரி ஏ.பி.வி.பி.யின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் விரேந்திரசிங் சோலங்கி 2025–26 ஆண்டிற்கான தேசிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த ஆண்டு ஏ.பி.வி.பி தனது சரித்திரத்தில் அதிகபட்சம் உறுப்பினர் சேர்க்கையாக 76 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்துள்ளனர். இது இளைஞர்கள் தேசிய விவகாரங்களில் அதிக ஆர்வத்தோடு ஈடுபாடு காட்டுவதை பிரதிபலிப்பளிக்கிறது.
ஏ.பி.வி.பி தேசிய பொதுச் செயலாளர் வீரேந்திர சிங் சோலங்கீ ஊடகத்திடம் பேசிய போது, கல்வி, கலாச்சாரம் மற்றும் தேசிய நலன் அடிப்படையாகக் கொண்ட “நல்ல மாணவர் இயக்கத்தை” உருவாக்குவதில் அமைப்பு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தனது 71வது தேசிய மாநாட்டிற்குப் பிறகு, மாணவர் நலன், பண்பாட்டு விழிப்புணர்வு மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமான புதிய தீர்மானங்களை அறிவித்துள்ளது. மாநாட்டின் பல்வேறு விவாதங்களில் முன்வைக்கப்பட்ட கேள்விகளை ஒன்றிணைத்து ஐந்து முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கல்வி அமைப்பை ஒருங்கிணைக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பங்களாதேஷ் நுழைவால் உருவாகும் தேசிய பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக அணுகுதல்
மனிதனால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளைத் தடுக்க சமூகம் செயல்முறையாக கலந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் எழும் பிரிவினை சக்திகளை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த சமூக வலிமை தேவை.
சமூக மாற்றத்தின் மையமாக இளைஞர்கள் தீர்மானகரமான பங்கை வகிக்க வேண்டும்.
ஏ.பி.வி.பி.யின் 71வது மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட முக்கிய திட்டங்கள்:
தேசிய விடுதி (Hostel) ஆய்வு
‘ஸ்க்ரீன் டைம் டு கிரீன் டைம்’ பிரச்சாரம்
வரலாற்று நிகழ்வுகளின் ஆண்டு விழாக்கள்
மகாராணி அப்பக்காவின் 500வது பிறந்தநாள்
பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாள்
அவசரநிலைக்கு 50 ஆண்டுகள்
‘வந்தே மாதரம்’ 150 ஆண்டு
கல்லூரிகளில் பண்பாட்டு நிகழ்ச்சிகள்
அறிவுசார் விவாதங்கள்
மாணவர் தொடர்பு இயக்கங்கள் நடத்தப்படும்.
தேசிய பொதுச்செயலாளர் சோலங்கீயின் மாநாட்டு உரையில், இந்த “71வது தேசிய மாநாடு ஏ.பி.வி.பி .யின் மாணவர் நலன் மற்றும் தேசிய நலனுக்கான பணியை மேலும் வலுப்படும் விதமாக உள்ளது. இத்தீர்மானங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்த அமைப்பு தொடர்ந்து உழைக்கும் என்று உறுதிபட கூறியுள்ளார்.”
“ஏ.பி.வி.பி-யின் 71வது தேசிய மாநாடு மாணவர் நலனிற்கும் தேசிய நலனிற்கும் தெளிவான திசையை நிர்ணயம் செய்துள்ளது. இந்த மாநாடு ‘வந்தே மாதரம்’ முழக்கத்துடன் மற்றும் கொடி ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
கட்டுரையாளர்: ஸ்ரீராம்
வழக்கறிஞர், ஏ.பி.வி.பி. வடதமிழ்நாடு