இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம்

பிஹார் சட்டமன்ற தேர்தல், 2025- நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. ஹிந்துக்கள் தங்களின் நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். பல்வேறு தரப்பினர் சிறுபான்மையினரான முஸ்லீம்களின் வாக்குகளை பெறுவதற்காகவே, பல்வேறு சலுகைகள் வழங்குவதும், ஹிந்துக்களிடையே பிரிவினையை உருவாக்குவதும் நடைபெறுகிறது. ஹிந்துக்களின் எழுச்சியின் காரணமாக, பிஹாரில் உள்ள பூர்வீக முஸ்லீம்களுக்கும், ஊடுருவிய முஸ்லீம்களுக்குமிடையே பாகுபாடு ஏற்பட்டதின் காரணமாக, ஓவைசியின் கட்சி, இரண்டு தரப்பினரும் ஒன்றே என்ற முழக்கத்தை வைத்துள்ளார். இதனால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து கொண்டு, ஹிந்துக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய தருணமாகும்.

243 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பிஹார் மாநிலத்தில், சுமார் 70 முதல் 85 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி, தோல்விகளை நிர்ணயம் செய்யும் இடத்தில் முஸ்லீம்கள் உள்ளார்கள். குறிப்பாக கிஷன்கஞ்ச் (68%), கட்டிஹார் (43%), அராரியா (42%) மற்றும் பூர்னியா (38%) போன்ற சீமாஞ்சல் பகுதிகளுக்குட்பட்ட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை முஸ்லீம் வாக்காளர்கள் கொண்டுள்ளனர் என்று 2022-ல் எடுக்கப்பட்ட சாதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, புதிதாக கட்சி துவங்கிய பிரசாந்த் கிஷோர் 40 முஸ்லீம் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளார். ஓவைசியின் கட்சி 64 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ஊடுறுவிய முஸ்லீம்களால் பிஹாரில் ஏற்படும் ஆபத்துக்கள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்:
ஊடுருவலால் தேசிய பாதுகாப்பிற்கு ஒரு தீவிரமான அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மக்கள் தொகையில் மாற்றம் (Demographic Change): வங்காளதேச முஸ்லிம்களின் ஊடுருவலால் பிஹாரின் சில பகுதிகளில், குறிப்பாக பங்களாதேஷ் எல்லைக்கு அருகில் உள்ள சீமாஞ்சல் பிராந்தியத்தின் சில மாவட்டங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகை விகிதம் அதிகரித்து வருவதாக பல்வேறு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஊடுருவலானது ‘வாக்கு வங்கி அரசியல்’ காரணமாக அரசியல் கட்சிகளால் ஊக்குவிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. ஊடுருவியவர்கள் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்ற கவலைகளும் எழுப்பப்படுகின்றன.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) இனணைந்து ஹிந்து வாக்காளர்களை நேரடியாகப் பிரிப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட சாதிகள் மற்றும் முஸ்லீம் மதக் குழுக்களை ஒருங்கிணைப்பதில் முதன்மையாக கவனம் செலுத்துகிறது. எப்பொழுது காங்கிரஸ் கட்சி சோனியாவின் கைக்கு வந்ததோ, அப்பொழுதே, ஹிந்து வாக்குகளை பிளவுபடுத்தி வெற்றி பெற வியூகங்கள் வகுக்கப்பட்டன. நடைபெறும் பிஹார் தேர்தலில் கூட, மகா கட்பந்தன் கூட்டணியானது, மொத்த ஹிந்து வாக்காளர்களில் சுமார் 35 சதவீதம் வாக்களிக்க முன்வருவதில்லை. 20 முதல் 30 சதவீத ஹிந்துக்களின் வாக்குகளை பிளவுபடுத்தினாலே வெற்றி பெற்று விடலாம் என்ற கருத்தியலில் செயல்படுகிறது. ஆகவே ஹிந்துக்கள் இந்த ஆபத்தை உணர வேண்டும்.