கேரள மாநிலம் காசர்கோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது. நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த நெருக்கடியை பா.ஜ., சவாலாக எடுத்துள்ளது. எங்கள் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பா.ஜ., நாட்டின் மிகவும் நம்பகமான கட்சி.
நாட்டை பலவீனப்படுத்த சதி நடக்கிறது. ராம நவமி கொண்டாட்டத்தை தடுக்க முயற்சிக்கின்றனர். ராமரை எதிர்த்தவர்கள் நாட்டில் வீழ்ச்சியை சந்தித்தனர். இது நாம் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பேச்சும், செயலும் வேறு வேறு. வரும் லோக்சபா தேர்தலில் கேரளாவில் பா.ஜ., இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.