கர்நாடக மாநிலம் கெரகோடு கிராமத்தில் 108 அடி உயர கம்பத்தில் ஹனுமன் கொடி ஏற்றியதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த கொடி அகற்றப்பட்டது.
இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மண்டியாவில் உள்ள அனைத்து இந்துக்களும் தங்களின் வீடுகளில் ஹனுமன் கொடியை ஏற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கெரகோடு, பாண்டபுரா, பிரியபட்ணா ஆகிய இடங்களில் வீடுகளின் மேல் ஹனுமன்கொடி ஏற்றப்பட்டிருந்தது. மேலும், பஜ்ரங் தளம், ராம் சேனா, ஹனுமன் சேனாஆகிய அமைப்பின் அழைப்பை ஏற்று மங்களூரு, மைசூரு, மண்டியா ஆகிய இடங்களில் உள்ள இந்து கோயில்கள், மடங்கள் ஆகியவற்றில் நேற்று ஹனுமன் கொடியை ஏற்றினர்.