சென்னையில் திமுக சார்பில்இண்டியா கூட்டணித் தலைவர்களை அழைத்து, மகளிர் உரிமைமாநாட்டை நடத்தி, 33 சதவீத இடஒதுக்கீட்டை விமர்சித்துள்ளனர். எந்தவித பின்னணியும் இல்லாமல், தடைகளை உடைத்து அரசியலுக்கு வரும் சாதாரண பெண்களுக்காக 33 சதவீத ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, இவர்களுக்கு அதைப் பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் இண்டியாகூட்டணியால் பாஜகவை வீழ்த்தமுடியாது. அனைத்து இடங்களிலும் பாஜக வெல்லப்போகிறது.
மின் கட்டண உயர்வால் சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, கட்டண உயர்வை ரத்து செய்து, பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். தீவிரவாதத்தை பாஜக மதமாக பார்க்கவில்லை. மக்களின் உயிரை எடுக்கதுணிந்தவர்களுக்கு, மன்னிப்பே வழங்கக் கூடாது. அவர்கள் சிறையில்தான் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.