தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், ஜூலை, 28ல் பாதயாத்திரை துவக்கினார். இரண்டாம் கட்ட யாத்திரையை, நீலகிரி மாவட்டம் குன்னுாரில் செப்., 28ல் நிறைவு செய்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து, மூன்றாம் கட்ட யாத்திரையை இம்மாதம், 6ம் தேதி முதல் துவக்க, அண்ணாமலை திட்டமிட்டிருந்தார். அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், டாக்டர்கள் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, வரும், 16ம் தேதி கோவை அவிநாசியில், மூன்றாம் கட்ட யாத்திரையை அவர் துவக்க உள்ளதாக, தமிழக பா.ஜ., அறிவித்துள்ளது. நவ., 9ல், திருச்சி மாவட்டம் லால்குடியில் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார்