திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் அலுவலகம் உட்பட பல இடங்களில் ரெய்டு

தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம், ஹோட்டல் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று(அக்.,05) காலையில் வரிமானவரி துறைஅதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். தி.நகரில் உள்ள ஹோட்டல், வேளச்சேரியில் உள்ள பல் மருத்துவமனை, அடையாறு பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

 

மேலும் சென்னை வேளச்சேரி, காஞ்சிபுரம், புதுச்சேரியில் உள்ள மதுபான ஆலை மற்றும் அவர் தொடர்பான அலுவலகங்களிலும் ரெய்டு நடக்கிறது.