தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்பட 40 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த செப்.12 ஆம் தேதி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்கு,குவாரி அதிபர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த நபர் ரியல் எஸ்டேட் தொழிலில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக வரப்பட்ட புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையைப் போல் திருச்சி, தஞ்சாவூரிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.