இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக, எஸ்.இ.ஏ., எனப்படும், இந்திய சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கம் மேலும் தெரிவித்திருப்பதாவது:இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 33 சதவீதம் உயர்ந்து, 18.66 லட்சம் டன்னாக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 14.01 லட்சம் டன்னாக இருந்தது. குறைந்த வரி மற்றும் உள்நாட்டு விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட தேவை அதிகரிப்பே, இதற்கு காரணமாகும்.