பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை விநியோகிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்து இருப்பதால் அதற்கான பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பாக 3 கோடியே 56 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்டது. இதுகுறித்து அதன் தலைவர் லியோனி வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், அடுத்த ஆண்டு பாட புத்தகத்தில் கருணாநிதி வரலாறு சேர்க்கப்படும் என்ற செய்தியை பகிர்ந்தார். இந்த ஒரு செய்திக்கு இந்து முன்னணியின் டுவிட்டர் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில், தலைவர் பின்பற்றிய மாட்டிக்கொள்ளாமல் சுருட்டுவது எப்படி எனும் அரிய வரலாறு இடம் பெறுமா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.