உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் ஜமால் கான் என்ற முஸ்லிம் நபர் தனது அடையாளத்தை மறைத்து சோனு என்ற ஹிந்து பேயருடன் ஒரு ஹிந்து பெண்ணை ஏமாற்றி லவ் ஜிஹாத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக முஸ்லிமாக மதமாற்றம் செய்து திருமணமும் செய்து கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு ஜமால் கான் அந்த பெண்ணை முத்தலாக கூறி வீட்டை விட்டு துரத்தினார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண், காவல்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரில், மஜோலாவின் குஷல்பூர் பகுதியில் வசிக்கும் அந்த பெண்ணை ஜமால் கான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சோனு என்ற பெயரில் ஹிந்துவாக காட்டிக் கொண்டு நட்பாக பழகினார். அவனது வலையில் விழுந்த பிறகு திருமணம் செய்வதாக கூறினார். திருமணத்திற்கு சற்று முன்பு, தான் உண்மையில் ஒரு முஸ்லிம் என்பதை வெளிப்படுத்தியதுடன் கட்டாயப்படுத்தி மதம் மாற்றினார். பிறகு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் ஆன உடனேயே, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தத் துவங்கினார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு ஜமால் கான் அந்த பென்ணிடம் கார் மற்றும் ஐந்து லட்சம் ரூபாயை மீண்டும் வரதட்சணையாக கோரினார். இதற்கிடையில், ஜமால் கானுக்கு ஏற்கனவே திருமணமாகி 18 ஆண்டுகள் ஆனதாகவும், இரண்டு குழந்தைகள் இருப்பதையும் அந்த பெண் அறிந்தார். இது குறித்து கேட்டபோது, அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. ஜமால் கான் அந்த பென்ணை உடல் ரீதியாக துன்புறுத்தினார். குடித்துவிட்டு வந்து போதையில் தகராறு செய்தார், இறுதியில் முத்தலாக் சொல்லிவிட்டு அவளை வீட்டை விட்டுத் துரத்தினார்” என தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் புகாரின் பேரில், மஜோலா பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முத்தலாக் சட்டவிரோதமானது என்பது நினைவு கூரத்தக்கது.