பாரத மக்களின் சுய விவரங்கள், நாட்டின் முக்கியத் தகவல்களை திருடும் செயலிகளை கண்டறிந்து அவற்றை தொடர்ந்து தடை செய்து வருகிறது மத்திய அரசு. விதித்து வருகிறது. அவற்றுடன், சட்டவிரோதமாக எவ்வித பதிவும் இன்றி அநியாய வட்டி வாங்கும் கடன் வழங்கும் செயலிகள் உள்ளிட்ட சட்டவிரோத செயலிகள், இணையதளங்கள் உள்ளிட்டவையும் கண்டறிந்து தடை செய்யப்படுகின்றன. இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுபவை பெரும்பாலும் சீன நாட்டின் நிறுவனங்களாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாரதத்தில் செயல்படும் ஐ.எம்.ஓ, நேண்ட் பாக்ஸ் உள்ளிட்ட 14 மெசேஞ்சர் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாதிகள் தொடர்புடைய விவகாரங்களால் இத்தகைய செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் பேரில் மத்திய அரசு தடை விதித்துள்ளது.