காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் சொந்த மாவட்டமான கர்நாடக மாநிலம் கலபுர்கியில் நடந்த மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. கர்நாடகாவில் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, கலபுர்கி மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேயர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ் கபானூரை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து விஷால் தர்கி வெற்றி பெற்றார். சிவானந்த் பிஸ்டி, காங்கிரசை எதிர்த்து போட்டியிட்ட விஜயலட்சுமியை சம வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து துணை மேயர் பதவியை கைப்பற்றினார். முன்னதாக, கலபுர்கி மாநகராட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் வர்ஷா ஜேன், மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் செயல்முறைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அதனை நிறுத்த முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.