பள்ளி முதல்வரின் அறையில் மதுபானம், ஆணுறைகள்

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷனரிப் பள்ளி, அதிபரின் அறையில் திடீர் சோதனை நடத்தியதில், மதுபானம் மற்றும் ஆணுறைகள் சிக்கியதால், அந்த பள்ளி சீல் வைக்கப்பட்டது. மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (எஸ்.சி.பி.சி.ஆர்) சார்பில் சனிக்கிழமை வழக்கமான ஆய்வை மேற்கொண்டபோது இது கண்டறியப்பட்டது. அவர்கள் மிஷனரி பள்ளியில் படுக்கைகள், மதுபானங்கள், ஆணுறைகள், முட்டை தட்டுகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். “காஸ் சிலிண்டர் மற்றும் மது பாட்டில்கள் உட்பட பிற ஆட்சேபனைக்குரிய பொருட்கள் இருந்ததை நான் அங்கு பார்த்தேன். காவல்துறையினர் முழு விஷயத்தையும் விசாரித்து வருகின்றனர். இது ஒரு முழுமையான குடியிருப்பு அமைப்பு போல் இருந்தது. இது ஒரு நபருக்கு மட்டும் சொந்தமானது அல்ல, ஆனால் அங்கு வசித்த பலர் கட்டடத்திலிருந்து வெளியே வந்தனர். இது ஒரு தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது. கட்டடத்தின் மற்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்போது, அந்த குறிப்பிட்ட பிரிவு ஏன் விடுபட்டது? என்ற கேள்வி எழுகிறது. தான் அங்கு தங்கவில்லை என்று பள்ளியின் முதல்வர் சொன்னார். அப்படியெனில், யார் அங்கு தங்கினார்கள், ஏன் 15 படுக்கைகள் உள்ளன. மிக முக்கியமாக, அந்த அறைக்கு பெண் மாணவர்களின் வகுப்பறைகளுடன் நேரடி நுழைவு ஏன் உள்ளது? மேலும், பள்ளி வளாகத்தில் மதுபானம் அருந்துவதற்கு அனுமதி இல்லை. இது அப்பட்டமான சட்ட மீறல். இந்த அளவுக்கு மதுபாட்டில்களை யாரும் வைத்திருக்கக் கூடாது என்பதும் சட்ட விரோதம் என்பதால் கலால் துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆணுறைகள் உட்பட வேறு சில ஆட்சேபனைக்குரிய பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன” என்று மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வுக் குழு உறுப்பினர் நிவேதிதா சர்மா கூறினார். இது சம்பந்தமாக, பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரிவான விசாரணை நடத்த காவல்துறையிடம் கோரப்பட்டுள்ளது.