பத்திரிகையாளரை தாக்கிய பிரிவினைவாதிகள்

அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள பாரதத் தூதரகத்திற்கு முன்னால், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் நூற்றுக்கணக்கில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காலிஸ்தான் பிரிவினை கோஷங்களை எழுப்பினர். பாரதத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காலிஸ்தான் கொடி என கூறப்படும் சில கொடிகளையும் ஏந்தியிருந்தனர். மேலும் அவர்கள் அமெரிக்காவுக்கான பாரதத் தூதர் தரண்ஜீத் சிங் சந்துவை அவர்கள் மிரட்டி உள்ளனர். அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த போலி நாடகம் ஒரு முடிவுக்கு வரும், உங்களது கார் கண்ணாடிகள் நொறுங்கும் நாள் வரும். தூதரகத்தில் உள்ளவர்கள் எங்கும் தப்பி செல்ல முடியாது என அச்சுறுத்தினர். அவர்கள் அனைவரும் அமெரிக்காவின் வாஷிங்டன், மேரிலேண்ட், விர்ஜீனியா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அங்கு வந்துள்ளனர். தூதரகத்திற்கு வெளியே இருந்த பாரதத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் மீது இந்த பிரிவியனிவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தூதர், தூதரக ஊழியர்கள் மிரட்டப்பட்டதற்கும் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கும் பாரதம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளது.