தமிழகத்தில் ‘இயேசு அழைக்கிறார்’ என்கிற பெயரில் கிறிஸ்தவ சபையை நடத்தி வருபவர் கிறிஸ்தவ மதபோதகரான பால் தினகரன். பாரதம் மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளிலும் ஜெபக் கூட்டங்களை நடத்தி வருவதோடு, கிறிஸ்தவ மத மாற்றத்திலும் ஈடுபட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. மேலும், இவர் முறையாக வரிமான வரி செலுத்தாததாகக் கூறி, வரிமான வரிச் சோதனையும் நடத்தப்பட்டதும் நினைவு கூரத்தக்கது. இந்நிலையில், இலங்கையில் மார்ச் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்கள் பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொள்ளும் கிறிஸ்தவ மதக் கூட்டம நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக, யாழ்பாணம் முழுவதும் போஸ்டர்களை அச்சடித்து ஒட்டி, துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர். பால் தினகரன் குடும்பத்தினர் இலங்கையில் மதக் பிரசாரம் மற்றும் மதமாற்றுக் கூட்டம் நடத்த, யாழ்ப்பாணம் சிவசேனை அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் பால் தினகரன் வருகைக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து யாழ் முழுவதும் ஒட்டினர். அதில், யாழ் ஒரு சிவபூமி. மத மாற்றி பால் தினகரனே கால் வைக்காதே என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. மேலும், பால் தினகரன் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 500க்கும் மேற்பட்டோர் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். அதில், வர்த்தக, சுற்றுலா விசாவில் வருகை தரும் ஒருவர் மதப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். மதப் பிரசாரம் என்கிற பெயரில் பால் தினகரன் குடும்பத்தினர் மத மாற்றத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, பால் தினகரன் குடும்பத்தினர் மதப் பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதனிடையே, திட்டமிட்டபடி, கொழும்பு மற்றும் கண்டியில் மதம் சார்ந்த நிகழ்வில் ஈடுபட்ட பால் தினகரன் குழுவினர், 23ம் தேதி மாலை 4 மணிக்கு தனியார் விமானம் மூலம் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது, பால் தினகரன் குழுவினரை வெளியேற அனுமதிக்க முடியாது என்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தடை விதித்தனர். தொடர்ந்து, அந்த குழுவினர் அனைவரின் பாஸ்போர்ட்களையும் வாங்கிக்கொண்டு யாழ்ப்பாணம் நகரிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்க அனுமதித்தனர். மதக் கூட்டம் மற்றும் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்று உத்டரவிட்டனர். பின்னர், பால் தினகரன் குழுவினர் இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.