பயங்கரவாதிகளிடம் விசாரணை

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஜமேஷா முபின் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ்  பயங்கரவாதில் உயிரிழந்தான். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த பயங்கரவாத கூட்டளிகள், சந்தேக நபர்கள் என இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகியோரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில்  அனுமதி பெற்றனர். இதையடுத்து, 5 பேரையும் நேற்று காலை கோவை காவலர் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள தற்காலிக என்.ஐ.ஏ அலுவலகத்துக்கு அழைத்து வந்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும், கோட்டைமேடு, உக்கடம் பகுதிகளுக்கும், சதித் திட்டம் தீட்டிய சத்தியமங்கலம் காட்டுப்பகுதி, குன்னூர் உள்லிட்ட பகுதிகளுக்கு அவர்களை நேரில் அழைத்துச் சென்று, விசாரணை நடத்தவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.