கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபுவை தி.மு.க கவுன்சிலரும் அக்கட்சியின் குண்டர்களும் சேர்ந்து அடித்து கொலை செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும் ராணுவ வீரர் மரணத்துக்கு நீதி கேட்டும் தி.மு.கவை கண்டித்தும் சென்னையில் பிப்ரவரி 21 அன்று தமிழக பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மேலும் உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்தில் இருந்து பா.ஜ.கவினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாகச் சென்று போர் நினைவுச்சின்னத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணமலை, கட்சியின் மூத்த நிர்வாகிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பா.ஜ.க தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கூறி அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த அண்ணாமலை, ‘வழக்குப்பதிவால் நாங்கள் யாரும் பயந்துவிட மாட்டோம். இது என் மீதான 84வது வழக்கு. இந்த விவகாரத்தில் நாங்கள் விரும்புவது என்னவென்றால், தங்கள் கட்சிக்காரர் கொலை செய்த ராணுவ வீரரின் குடும்பத்தினரிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’ என்றார்.