பிரதமர் நரேந்திர மோடி குறித்து பி.பி.சி வெளியிட்டுள்ள சர்ச்ச்கைகுரிய ஆவணப்படம் குறித்து ஊடகத்தினருடன் பேசிய மாநிலங்களவை எம்.பி மகேஷ் ஜெத்மலானி, “இந்த ஆவணப்படம் சீனாவால் ஈர்க்கப்பட்ட முயற்சியைத் தவிர வேறில்லை. பாரத எதிர்ப்பு பிரச்சார வெளியீடுகளில் பி.பி.சிக்கு நீண்டகால வரலாறு” உள்ளது. அவர்கள் (பி.பி.சி) முழுவதுமாக நிதி ரீதியாக அவர்களை (சீனா) சார்ந்து இருக்கிறார்கள். சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மூலம் பி.பி.சி சீனாவுடன் நிதி ரீதியாக முற்றிலும் இணைந்திருப்பதை இது காட்டுகிறது” என கூறியுள்ளார்.