குடியரசுதின விழாவில் மாணவர்கள் சர்ச்சை

அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்திற்கு வெளியே குடியரசு தின நிகழ்வின் போது தேசிய மாணவர் படை (என்.சி.சி) சீருடை அணிந்த மாணவர்கள் சிலர் மத முழக்கங்களை எழுப்பிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. கோஷம் எழுப்பிய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு அலிகார் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வீடியோவில், குடியரசு தின நிகழ்வின் போது சில மாணவர்கள் என்.சி.சி சீருடையை அணிந்துகொண்டு என்.சி.சி கொடியை ஏந்தியபடி மூவர்ணக் கொடியுடன் கூடிய கொடிக்கம்பத்திற்கு அருகில் நின்றுகொண்டு “அல்லா ஹு அக்பர்” என்று இஸ்லாமிய மேலாதிக்க முழக்கங்களை முழங்கியது தெளிவாகத் தெரிகிறது. பல்கலைக் கழக கண்காணிப்பாளர் வாசிம் அலி, இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர் அடையாளம் தெரிந்தவுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.