தேவையில்லாமல் தலையிடும் அறநிலையத் துறை

ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய சடகோப ராமானுஜ ஜீயர், “ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ராமானுஜர் ஏற்படுத்திய வழிபாட்டு முறைகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மாற்றி உள்ளனர். தென் ஆச்சாரிய சம்பிரதாயமுள்ள கோயில்களில் மரபுகள் மீறப்பட்டு வருகின்றன. சில அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். கோயில் உள் விவகாரங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை. ஆனால், முன்பு செயல் அலுவலராக இருந்த ஜெயராம், ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவ நாட்களில் விஸ்வரூப தரிசனத்துக்குத் தடை, பெருமாளுக்கு நைவேத்யம் செய்வதில் மாற்றங்கள் போன்றவற்றை செய்து விதிமுறைகளை திருத்தி உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று சில அதிகாரிகள் செய்யும் தவறுகளால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் தவறுகளை அரசுக்கு சுட்டிக்காட்டும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள்” என தெரிவித்தார்.