வால்மார்ட் குழுமத்தின் டிஜிட்டல் பணம் செலுத்தும் நிறுவனமான ‘போன் பே’ இதுவரை அதன் தலைமையகத்தை சிங்கப்பூரில் வைத்திருந்தது. அங்கிருந்து உலகம் முழுவதும் தனது சேவையை செய்து வந்தது. இந்நிலையில் அந்நிறுவனம், தற்போது ஒரு சில நிர்வாகக் காரணங்களுக்காக சிங்கப்பூரில் இருந்து பாரதத்துக்கு அதன் தலைமையகத்தை மாற்ற திட்டமிட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடையும் என தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் போன் பே நிறுவனத்தின் பங்குதாரரான ஃபிளிப்கார்ட் நிறுவனம், தொடர்ந்து சிங்கப்பூரிலேயே தனது தலைமையகத்தை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. போன் பே நிறுவனத்தின் இந்த முடிவை பாரதம் நிறுவனத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ளது. தற்போது பாரதத்தில் போன் பே நிறுவனத்திற்கு சுமார் 250 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாகவும் ஒவ்வொரு மாதமும் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இந்த செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.