தீஸ்தா செதல்வாட்டின் சதித்திட்டம்

குஜராத்தில் 2002ல் நடைபெற்ற கலவர வழக்கில் புனையப்பட்ட ஆதாரங்கள், குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி), ‘முன்னாள் காங்கிரஸ் தலைவர் அகமது படேலின் உத்தரவின் பேரில் நரேந்திர மோடிக்கு எதிரான அரசியல் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக அகமதாபாத் அமர்வு நீதிமன்றத்தில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி ஸ்ரீகுமார் மற்றும் சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் ஆகியோர் அப்போதைய குஜராத் அரசு மற்றும் முதல்வர் நரேந்திர மோடியை கலவர வழக்கில் பொய்யாக சிக்க வைத்தனர். இதற்காக அகமது படேலிடம் இருந்து தீஸ்தா செதல்வாட், ரூ. 30 லட்சம் பெற்றார். 2002 குஜராத் கலவரத்திற்குப் பிறகு நரேந்திர மோடிக்கு எதிரான பிரச்சாரத்திற்கான கைமாறாக 2007ம் ஆண்டில் ‘பத்மஸ்ரீ’ விருதையும் அவர் பெற்றார். இதைத்தவிர, ராஜ்யசபா உறுப்பினராக வேண்டும் என்ற தனது அரசியல் லட்சியத்தை அடைய, குஜராத் கலவரத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். ஆனால், இந்த போட்டியில் ஜாவேத் அக்தர் மற்றும் ஷபானா ஆஸ்மி போன்ற பாலிவுட் பிரபலங்களுக்கு காங்கிரஸ் முன்னுரிமை அளித்தபோது அவர் கோபமடைந்தார். குதுபுதீன் அன்சாரி 2002 குஜராத் கலவரத்தின் முகமாக மாற்ற தீஸ்தா செதல்வாட் முயன்றார். குதுபுதீன் புகைபடத்தைப் பயன்படுத்தி நிதி சேகரிக்கவும், மாநிலத்தை தவறாக சித்தரிக்கவும் முயன்றார். குதுபுதீன் அன்சாரி இந்த தவறான நடவடிக்கையை அறிந்ததும் உடனடியாக குஜராத் திரும்பினார். இறந்த பா.ஜ.க தலைவர் ஹரேன் பாண்டியாவின் தந்தை வித்தல்பாயை ஏமாற்றி, தனது சிட்டிசன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் (சி.ஜே.பி) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்க்க முயன்றார்’ என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன்வைத்தது.