ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர், மத உணர்வுகளை புண்படுத்துதல், சாட்சியங்களை அழித்தல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பல டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக குரல் எழுப்பப்பட்டது. இதுகுறித்து விசாரித்த டெல்லி காவல்துறை அவற்றில் பெரும்பாலானவை பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளது. மேலும், அவர் பாகிஸ்தான் மற்றும் சிரியா உட்பட சில முஸ்லிம் நாடுகளில் உள்ள சில மதவாத அமைப்புகளிடம் இருந்தும் வெளிநாட்டு நன்கொடைகளை பெற்றுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அமலாக்கத்துறை முகமது ஜுபைர் செய்துள்ள பணமோசடிகளை கண்டறிய அவரது வங்கி கணக்கு விவரங்களை ஆய்வு செய்யவுள்ளது.