மகாராஷ்டிரா சட்டப் மேலவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பட்டியலின வேட்பாளர் சந்திரகாந்த் ஹண்டோர் பெரும் தோல்வியைச் சந்தித்தார். இதையடுத்து, சொந்தக் கட்சிக்கு எதிராகவே, காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டங்களை நடத்தினர். செம்பூரில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தில்‘காங்கிரஸ் ஒழிக’ கோஷங்கங்கள் எழுப்பப்பட்டது. ஒரே ஒரு வேட்பாளரின் வெற்றியை உறுதிசெய்யும் பலம் மட்டுமே தன்னிடம் இருப்பதை அறிந்திருந்தும், சந்திரகாந்த் ஹண்டோர் மற்றும் பாய் ஜக்தாப் ஆகிய இரு வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நிறுத்தியது. அதில், மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு பட்டியலின வேட்பாளரான ஹண்டோரை வெற்றி பெறவைக்க தலைமை முயற்சிக்கவில்லை. அவரை வேண்டுமென்றே தோல்வியடைய வைத்தது என்று போராட்டத்தில் ஈடுபட்டோர் குற்றம் சாட்டினர்.