பாரதத்துக்கான சீனத் தூதர் சன் வெய்டாங், தி ஹிந்து நாளிதழின் தலைமையகத்துக்கு கடந்த புதன்கிழமை சென்றார். தி ஹிந்து பத்திரிகை தீவிர இடதுசாரி சிந்தனை கொண்டது என்ற புகார் பலகாலங்களாக உள்ளதை யாரும் மறுக்க முடியாது. இந்த சூழலில், அவரின் ஹிந்து பத்திரிகை விஜயத்தை நெட்டிசன்கள் பலர் கடும் விமர்சனம் செய்துள்ளனர். முன்னதாக, சீனாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே நட்பு பரிமாற்றம் மற்றும் நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக வீடாங் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகத்தில் இடதுசாரிகளுடன் பின்னிப் பிணைந்துள்ள தி.மு.க தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஒருவருடம் முடிந்துள்ள நிலையில் சீன தூதர் தமிழகம் வந்துள்ளார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.