பாரத் டுரோன் மஹோத்சவம்

பாரத் டுரோன் மஹோத்சவம் 2022 என்ற பாரதத்தின் பிரம்மாண்டமான டுரோன் திருவிழாவை இன்று காலை 10 மணிக்கு டெல்லியின் பிரகதி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். பிறகு கிசான் டுரோன் விமான ஓட்டிகளுடன் கலந்துரையாடும் பிரதமர், வானத்தில் டுரோன்களின் சாகசங்களை பார்வையிடுவதுடன், டுரோன் கண்காட்சி மையத்தில் புதிய நிறுவன பிரதிநிதிகளுடனும் உரையாடவுள்ளார். இந்தஇரண்டு நாள் நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், ஆயுதப் படை வீரர்கள், மத்திய ஆயுதப் படை வீரர்கள், பொதுத்துறை நிறுவனப் பிரதிநிதிகள், தனியார் நிறுவனத்தினர், டுரோன் புதிய நிறுவனத்தினர் உள்ளிட்ட 1,600 பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். கண்காட்சியில் 70க்கும் மேற்பட்டோர் டுரோன்களின் பல்வேறு பயன்பாடுகளை காட்சிப்படுத்துவார்கள். இந்த மஹோத்சவத்தில் டுரோன் விமான ஓட்டிகளுக்கான உரிமங்கள் காணொலி வாயிலாக வழங்கப்படுவதுடன், பொருட்களின் அறிமுகம், குழு விவாதம், டுரோன்களின் செயல்விளக்கம், பாரதத்திலேயே தயாரிக்கப்பட்ட டுரோன் டாக்ஸி மாதிரியின் காட்சிப்படுத்தல் போன்றவை இடம்பெறும்.