ஸ்வஸ்திக்கை அங்கீகரித்த கலிபோர்னியா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்டமன்ற உறுப்பினர் ரெபேக்கா பாயர் கஹான், புனிதம் மிக்க ஹிந்துக்களின் ஸ்வஸ்திக் மற்றும் நாஜிக்களின் ஹக்கென்க்ரூஸ் இடையே உள்ள வேறுபாடுகளை காட்டும் சட்டத் திருத்தங்களுடன் கூடிய சட்டமன்ற மசோதா 2282’ஐ, மே 23 அன்று இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் வாசித்தார். பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இது அங்குள்ள ஹிந்துக்களின் நீண்ட சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இனி, கலிபோர்னியாவில் ஹிந்துக்களின் ஸ்வஸ்திக் சின்னம் சட்டபூர்வமாக குற்றமற்றதாக கருதப்படும். ஹிந்து அமெரிக்கன் அறக்கட்டளையானது, நாஜி ஹக்கென்க்ரூஸ் மற்றும் ஹிந்துக்களின் புனித சின்னமான ஸ்வஸ்திக் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் குறித்து பொது மக்களுக்கும், சட்டமியற்றுபவர்களுக்கும் விரிவாக விளக்கி புரியவைக்க பெருமுயற்சி செய்தது. ஹிந்துக்களின் ஸ்வஸ்திக் என்பது, நாஜிக்களின் ஹக்கென்க்ரூஸ்  சின்னம் அல்ல; இரண்டும் வேறு வேறு என ஒரு என்பதை வெளிநாடுகளில் உள்ள ஒரு மாகாண சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது அங்கீகரிப்பட்டது இதுவே முதல் முறை. இந்தச் சட்டமூலம்,  நாஜிக்களின் சின்னத்தை இழிவு படுத்துவதாகக்கூறி ஸ்வஸ்திக் சின்னத்தை எவ்வகையிலும் இழிவுபடுத்துவது குற்றமாகும். அதற்கு 16 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 15 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும்.