மே 24ம் தேதி டோக்கியோவில் நடைபெறும் குவாட் தலைவர்களின் 4வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அங்கு அவர், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசந் ஆகியோரை சந்தித்து பேசுவதுடன், இந்த தலைவர்களுடன் தனித்தனியாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது. இந்த பயணத்தின் போது, ஜப்பானிய வர்த்தக தலைவர்களுடன் பிரதமர் மோடி வணிக நிகழ்வில் பங்கேற்கிறார். மேலும், ஜப்பானில் உள்ள பாரத சமூகத்தினருடனும் உரையாற்றுகிறார். பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு, பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி இடையேயான முதல் நேரில் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.