புகழ்பெற்ற சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் தொடர்ந்து இடதுசாரி சிந்தனையுடன் செயல்படுகிறது, வலதுசாரிகளை முடக்குகிறது என பலர் பல்வேறு ஆதாரங்களுடன் பல காலமாக குற்றம் சாட்டி வந்தனர். இந்த சூழலில்தான் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்க முனைந்தார். இந்நிலையில், டுவிட்டரைச் சேர்ந்த மூத்த பொறியாளரான சிரு. முருகேசன் என்பவர் ஏப்ரல் 28 அன்று புராஜெக்ட் வெரிடாஸ் நிறுவனத்தின் பத்திரிகையாளர் டிம் பூல் உடன் பேசியது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர், “டுவிட்டருக்கு பேச்சு சுதந்திரத்தில் நம்பிக்கை இல்லை. எலான் மஸ்க் பேச்சு சுதந்திரத்தை நம்புகிறார். அவர் ஒரு முதலாளி. நாங்கள் உண்மையில் முதலாளிகளாக செயல்படவில்லை, மிகவும் சோசலிஸ்ட் போல இருக்கிறோம். சித்தாந்த ரீதியாக இது அர்த்தமற்றது. ஏனென்றால் நாங்கள் உண்மையில் வலதுசாரிகளை மட்டுமே தணிக்கை செய்கிறோம். இடதுசாரிகளை அல்ல. ஒரே தளத்தில் இரண்டு தரப்பும் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. எலான் மஸ்க் டுவிட்டரை கையகப்படுத்தும் யோசனையை எனது இடதுசாரி சகாக்கள் வெறுத்தனர். அதற்கு எதிராக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். நிறைய ஊழியர்கள் கிளர்ந்தெழுந்தனர்.ஆனால் முடிவில், இயக்குநர்கள் குழு தங்கள் நலன்களுக்காக செயல்பட்டனர்” என தெரிவித்துள்ளார்.