முகலாயர்களால் அழிக்கப்பட்ட உண்மையான காசி விஸ்வநாதர் கோயில் என்று நம்பப்படும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் வீடியோ ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், முஸ்லீம் கும்பல் நீதிமன்ற உத்தரவையும் மீதி வாயிலில் கூடி நீதிமன்ற ஆணையர் அஜய் குமார் மிஸ்ரா தலைமையிலான குழுவை வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தது. இவ்வழக்கு விசாரணையில் நீதிமன்றம், மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி அளித்ததுடன் மூடிவைக்கப்பட்டுள்ள அடித்தளத்தை திறக்கவும் உத்தரவிட்டுள்ளது. கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மே 17க்குள் அறிக்கை தாக்கல்செய்யவும் கூறியது. மேலும், ஞானவாபி மசூதி நிர்வாகக் குழுவின் எதிர்ப்பை மறுத்த நீதிமன்றம், அஜய் குமார் மிஸ்ராவை அக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்க மறுத்துவிட்டது. முன்னதாக, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் வீடியோகிராபர் ஒருவர் மசூதியில் ஸ்வஸ்திக் சின்னம், நந்தி தேவர், தாமரை உருவங்கள் உள்ளிட்ட ஹிந்து உருவங்கள் மசூதி சுவர்களின் வெளிப் பக்கமெல்லாம் இருப்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.