அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து ஜாம்பவான் டுவைட் ஹோவர்ட், புனித யாத்திரைத் தலமான வாரணாசிக்கு வந்து ஹிந்து மதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள டுவைட் ஹோவர்ட், “வாரணாசிக்கு சென்ற பிறகு என்னோடும் உலகத்தோடும் நிம்மதியாக இருக்கிறேன். ஆன்மாவை புதுப்பித்த ஆன்மீக பயணம். புனித நகரின் மந்திர சீர்திருத்தத்திற்காக நரேந்திரமோடிக்கு வாழ்த்துக்கள். வாரணாசி பல புராணக்கதைகளை ஊக்கப்படுத்தியுள்ளது. நான் பணிவுடன் இருக்கிறேன். இந்த புனித நகரின் மறு அவதாரம் இன்னும் பலரை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.