இப்தார் நோன்பு நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் உரை பா.ஜ.க தலைவர்களின் கடந்த கால பேச்சுகளுக்கு எதிரானது. அதே நேரத்தில் அவரது பேச்சு சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. நான் பா.ஜ.க’வில் பயணித்த நாட்களில் இன்று அண்ணாமலை பேசிய கருத்துகளை நானும் பல மேடைகளில் பேசியிருக்கிறேன். அண்ணாமலை மிக சிறப்பாக செயல்படுகிறார். இப்படிப்பட்ட அரசியலை பா.ஜ.க முன்னெடுக்குமானால் தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது. “இன்ஷா அல்லா”எனத் தனது உரையை முடித்த அண்ணாமலை, மிகச்சரியாக தன் அரசியல் நகர்வை முன்னெடுக்கிறார். ஒரு அரசியல் பார்வையாளராக இக்கருத்தைப்பதிவிடுகிறேன்’ என கூறியுள்ளார் அ.தி.மு.கவை சேர்ந்த ஜெமிலா. பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் தற்போது வேகமாக பொதுமக்களை கவர்ந்து வரும் சூழலில், மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் வெளிப்படையாகவே அவரை வாழ்த்தி பேசுவது, தமிழகத்தில் பா.ஜ.க சரியான திசையில் பயணிப்பதையே எடுத்துக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.