டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் விமான நிலையத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நாளை “யோக் பிரபா” என்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணையமைச்சர் வி கே சிங் கலந்துகொள்கின்றனர். 2022 ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதற்கு ஏறத்தாழ ஒரு மாதம் உள்ள நிலையில், இந்த நிகழ்வு அன்றாட வாழ்க்கையில் யோகாவின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க உதவும். இந்த மாபெரும் நிகழ்வில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், அதனுடன் இணைந்த அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த 500க்கும் அதிகமான அலுவலர்கள் பங்கேற்பார்கள்.