அரும்பசி தீர்த்து அருளிய அன்னை

‘விருத்தாசலம்’ திருக்கோயிலின் மூலவர் விருத்தகிரீசுவரர். அம்மனுக்குப் பெயர் விருத்தாம்பிகை. குருநமசிவாயர் என்ற மகான், திருவண்ணாமலையிலிருந்து விருத்தாசலம் வந்து விருத்தகிரீசுவரரையும், விருத்தாம்பிகையையும் தரிசித்தார். பிறகு பசி மிகுதியால் ஒருபுறம் சுருண்டு படுத்துவிட்டார். தனது பசியைப் போக்க உணவு தருமாறு வேண்டி அங்குள்ள விருத்தாம்பிகையை மனதில் துதித்தார்.

page-2_pic                         நன்றி புனையும் பெரியநாயகி எனும் கிழத்தி

என்றும் சிவனார் இடக்கிழத்தி – நின்ற

நிலைக்கிழத்தி மேனி முழுநிலக் கிழத்தி

மலைக்கிழத்தி! சோறு கொண்டு வா!”

என்று பாடுகிறார். விருத்தாம்பிகைக்கு பெரியநாயகி என்றொரு பெயரும் உண்டு.பெரியநாயகி முதிய வடிவில் எதிரே தோன்றினார். என்னைப் பலமுறை ‘கிழத்தி’ என்று ஏன் பாடினாய்? கிழத்தி எவ்வாறு சோறும், நீரும் கொணர முடியும்?” என்று கேட்டு மறைந்தார்.

குரு நமசிவாயர்,

முத்த நதி சூழும் முதுகுன்றுறைவாளே!

பக்தர் பணியும் பதத்தாளே! – அத்தன்

இடத்தாளே! முற்றா இளமுலை மேலார

வடத்தாளே! சோறு கொண்டு வா!”

என்று மீண்டும் பாடினார். விருத்தாம்பிகையும் மிக மகிழ்ந்து அவர் எதிரில் இளங்குமரியாகத் தோன்றிச் சோறும், நீரும் அளித்ததாக வரலாறு.

விருத்தாசலம் கோயில் மிகவும் விசேஷமானது. ஒருமுறை சென்று வாருங்களேன்…!

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்