புனேயில் ஒரு மருத்துவமனையை திறந்து வைத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடாவுடனான தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அதில், நான் மகாராஷ்டிரா அரசில் அமைச்சராக இருந்தபோது, ரத்தன் டாடாவை ஒரு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வரவழைக்க உதவுமாறு ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஒருவர் என்னிடம் கோரிக்கை விடுத்தார். திறப்பு விழாவிற்கு வந்த ரத்தன் டாடா என்னிடம், ‘இந்த மருத்துவமனை ஹிந்துக்களுக்கு மட்டும்தானா?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘நீங்கள்ஏன் அப்படி உணர்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘இது ஆர்.எஸ்.எஸ் துவக்கிய மருத்துவமனை ஆயிற்றே’ என ரத்தன் டாடா பதிலளித்தார். அதற்கு நான், ‘இது எல்லா சமூகத்திற்கும் உரியது. ஆர்.எஸ்.எஸ் மதத்தின் அடிப்படையில் செயல்படவில்லை. அது எந்த மதத்தினரிடமும் பாரபட்சமும் பாகுபாடும் காட்டாது’ என்று கூறினேன்” என்றார்.